போர்க்கதைகள் நான் மிக அறிந்ததாய் இருந்தன. புனைவிலக்கியத்தில் அறிந்ததை எழுதுவது போலச் சலிப்பான வேலை வேறில்லை. அறிந்தவை ஒரு வகையில் அகங்காரத்தைச் சேர்ந்தவை. அறிந்ததை விடவும் அறியாததே சூர் கொண்ட பெருந் தெய்வம். அறிந்ததை அழித்து முன் செல்லும் பெருக்கே புனைவெழுத்து. அறியவியலாத அத் தெய்வத்திற்குத் தலையைக் கொடுக்காமல் அது யாருக்கும் திறப்பதில்லை. தன்னகங்காரத்தை பலி கொடுத்தே அதன் பாதைகளைத் திறக்க வேண்டும். அதுவே செயலூக்கத்திற்கான அடிப்படை. புறமனதின் களி கூடிச்செல்லும் போது அது தன்னைத்…