நாவல்

yatharthan.com

நகுலாத்தை

ஈழ நிலத்தின் போர் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் துயர்களைத் தின்று செரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் விழுவதும் பின் எழுவதுமான வன்னிக்கிராமம் ஒன்றின் கதையிது. தொல்  தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளையும் மனிதர்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின் முதல் நாவல்

மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்

போரும் அதுசார்ந்த வாழ்க்கையின் உளவியலும் சந்திக்கும் முரண்களை கதைகளாக்கியிருக்கும் பிரதி. போரின் உள்ளார்ந்த அழிவையும் வாழ்க்கை மீது சரிக்கப்பட்ட துயரையும் இக்கதைகள் எங்கும் காணலாம். இடையறாது நடந்த உள்நாட்டு யுத்தத்திற்குள் பிறந்து பால்ய காலத்தைப் போரிலே கழித்த கதைசொல்லி உருவாக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் போரினது அழிவோடு எப்படி மோதிச் சிதைகின்றதை வெளிப்படுத்தக்கூடிய கதைகள் இவை. ஆக்காட்டி வெளியீடாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த யதார்த்தனின் முதலாவது கதைத்தொகுப்பு இதுவாகும்.