July 8, 2024

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …

July 2, 2024

தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் ` அறிதல் முறைகளில்  பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல்.  மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை.  தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis  என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல.  தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு…

June 13, 2024

எருமை அறிவு இலக்கியம் அறிவின் (knowledge) மீதா புத்திசாலித்தந்த்தின்(intelligence) மீதா கவனக் குவிப்பைச்ச் செய்ய வேண்டும் என்று நண்பர் கேள்வியொன்றோடு உரையாடலொன்றை முடித்திருந்தார். விலங்கிலிருந்து உன்னித்து எழுந்த மனிதர்கள் இவ்விரண்டு செயலாலும் ஆனவர்கள்தான்.   மனிதர்களின்  அறிவு  (knowledge), இன்னொன்று அவர்களின் புத்தி கூர்மை (intelligence) இரண்டுக்குமான அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது இதைப்பற்றிய தெளிவையும் இலக்கியம் எதை அடிப்படையாகக் கொள்கின்றது என்பதையையும் காணலாம். மானிட அறிவு என்பது அடிப்படையில் உலகைப் புரிந்து கொள்வதற்கான மனிதர்களின் திறன்.  உண்மையை…

June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

May 28, 2024

ஆறு கால்களால் நடக்கும் பெண் இரண்டு வாரங்களாக பயணத்திலேயே  இருக்கிறேன். பெரிதாக எழுதவில்லை. வாசித்தேன் .பெரும்பாலான பயணங்களை குறிப்புகளாக சுருக்கி விட முடியாது,   இந்த ஆறு மாதங்களில்  பயணம் செய்த  சில இடங்கள் பற்றிய பயணக் கட்டுரைகள் கிடப்பில் இருக்கின்றன.  கொழும்பின் இரவுத்தெருக்களில் , உட்சந்துகளில் ஐந்து நாட்கள் தொடர்ந்து அலைந்தேன்.  நானொரு கிராமத்தான். நகரமென்றாலே அலுத்துக்கொள்பவன். பதட்டத்தில் வழிமாறக் கூடியவன்.  நகரம் என்பது வெளியில் எவ்வளவு விரிந்து உயர்ந்து கிடக்கிறதோ அதைவிட பல படிவுகள்…

May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

May 9, 2024

போர்க்காலத்தில் ஏன் நாவல்கள் எழவில்லை?   நாவற்காலம் 02 ஈழத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் கூரான இன முரண்களால் எழுந்த  உள்நாட்டு யுத்தத்தோடு ஈழத்தின் நாவல் வளர்ச்சி  மெல்லச் சரிந்தது. பேரியலக்கிய வடிவமான நாவல் முயற்சிகளின்  இச்சரிவின் பின்னால் போர் இருக்கிறதா என்ற கேள்விக்கு  போரும் இருக்கிறது என்ற பதிலே சரியானது என்று நினைக்கிறேன். இச்சரிவை அக்கால சமூக, அரசியல் சூழல் இரண்டு வகையில் பாதித்தது. அதில் முதன்மையானது,   `அரசியல்` நிலைபாடுகள் நாவலின் தேவையை முழுவதுமாக `சமூக…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’