ஊரி : சொல்லின் விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன. அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம். ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில் எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம். எவ்வாறு இருந்த போதும் …