April 25, 2024

சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன.  தேவாலயங்களுக்கு முன்னால்  மடுமாதா வருகைக்கான வரவேற்புகள்  பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக்  கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…

August 4, 2023

சில வருடங்களுக்கு முன்பு மலையாள/ தமிழ் சினிமா நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட நடிகை பார்வதி  தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்க கூட ‘மேனன்’ என்ற சாதியப் பின்னொட்டை இனிமேல் பயன் படுத்த போவதில்லை என்று அறிவித்தததோடு  தன்னுடைய உத்தியோக பூர்வ இணையப்பக்கங்கள், திரைப்படங்களில்  அவற்றை நீக்கினார்.   இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் அது  செய்த சிறிய நற்செயல் மட்டுமல்ல அது ஒரு பெரிய காலடி. ஏனெனில் இந்திய  மனங்களை , கருத்தியல் கூட்டை வடிவமைப்பதில் இந்திய சினிமாவின்…

July 28, 2023

‘மற்றவர்கள்’ என்று யாரும் இல்லை – ரமணர்  தமிழ்ச் சமூக அமைப்பின் உருவாக்கத்தையும், அதன் வரலாற்றையும், போக்கையும் விளங்கிக்கொள்வதற்கு சாதிய ஆய்வுகளும் உரையாடல்களும் முக்கியமானவை. சாதியம் என்பது ஒருவகைச் சமூக உறவாகும். சமூகத்தில் உள்ள பல்வேறு சாதிகள் தமக்கிடையே கொண்டிருக்கிற பொருளாதார, அரசியல், பண்பாட்டு  உறவுகளின் மூலமே சாதியம் என்ற சமூக அமைப்பு நிலைபெறுகின்றது. அடிப்படையில் இச் சாதிய உறவுகள் ‘சமத்துவமற்ற’ தன்மையினை அடிப்படையாக கொண்டவை. ஆதிக்கமும் வன்முறையும் நிறைந்தவை. தமிழ்ச் சமூகத்தில் இருக்க கூடிய ஆதிக்க…

July 25, 2023

எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த ஒருநபர் அங்கே வருகிறார். அவர் பத்திரிக்கை படிக்க விரும்புகிறார் ஆனால் மற்றவர் இவரைக்கவனிக்காமல் தொடர்ந்தும் வாசித்துக் கொண்டிருக்கிறார் உடனே இவர் அவரை ‘பேப் – பறையா வாசிக்கிறாய்?’ என்கிறார், உடனே வாசித்துக் கொண்டிருப்பவர் சளைக்காமல் ‘முக்குவரறிவித்தல் வாசிக்கிறன்’ என்று சடைந்து சொல்கின்றார். அவர்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’