July 2, 2024

தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் ` அறிதல் முறைகளில்  பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல்.  மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை.  தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis  என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல.  தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு…

June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

April 11, 2024

நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம்  என்ற என்னுடைய குறிப்பை வாசித்த நண்பர் ஒருவர் ஞாபக சத்தி / நினைவாற்றல் பற்றிக் கேட்டிருந்தார்.  குறிப்பாகக் கல்வி, கலை இலக்கியத்தில் அதன் பயன் பற்றியும் மனனம் செய்தல் போன்ற ஞாபகத்தை  நிலைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றியும் உரையாடல் ஒன்றைச் செய்யலாமா என்றார்.  என்னளவில் அவற்றைப்பற்றிய  புரிதல்களை உரையாடப் பார்க்கிறேன் என்றேன்.   மனித நினைவாற்றல் என்பது அவர்களின் பரிணாம வளர்ச்சியோடு மேம்பாடு அடைந்து வந்த ஒன்று.  மொழி நிகழ்கின்ற முக்கியமான வெளி.  நினைவாற்றலை நிலைபடுத்தல்…

November 2, 2023

விசாகேச சந்திரசேகரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விசாகேச சந்திரசேகரம், இலங்கையிலும் அவுஸ்ரேலியாவிலும் பணியாற்றிவருகிறார். நாவல் ,  நாடகவாக்கம் மற்றும் திரைப்படங்களை இயக்கிவரும் ஒரு கலைஞர். சிங்களத்திலும் தமிழிலும் படைப்புக்களை ஆக்கிவருகின்றார்.  இவருடைய இயக்கத்தில் வெளியான Frangipani , Paangshu ஆகிய திரைப்படங்கள் புகழ்பெற்றவை. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றவை. இவருடைய இயக்கத்தில்  இவ்வருடம் வெளியான மணல் என்ற தமிழ்த் திரைப்படம் சமீபத்தில் திரைத்துறையில் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான ரோட்டர்டாமின் (Rotterdam) சர்வதேச திரைப்பட விழாவின்…

September 22, 2023

ஆல்பர் காம்யூ கிரேக்க தொன்மங்களில் ஒன்றான  sisyphus இன் உருவகக் கதையை குறிப்பிடுவார், கிரேக்க புராணங்களின் படி sisyphus கடவுளர்களால் தண்டிக்கப்பட்டவர். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஓர் உருளை வடிவப்பாறையை ஒலிம்பஸ்மலைமேலே ஏற்ற வேண்டும்  உச்சிக்கு ஏற்றிய பின் அங்கிருந்து அதை தள்ளி விட வேண்டும். மீண்டும் கீழே வந்து அதை மேலே ஏற்றிச்செல்ல வேண்டும்  மீண்டும் மீண்டும் இடை விடாது இதைச்செய்ய வேண்டும் பசியோ, தாகமோ, மூப்போ , மரணமோ sisyphus க்கு இருக்காது. தொடர்ந்து…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’