July 23, 2024

அனுபவத்தை விற்பவர்களும் வாங்குபவர்களும் களிச் சுற்றுலாக்களுக்கும் பயணங்களுக்குமான வேறுபாட்டை பிரித்துக்கொள்வது முக்கியமானது. இன்றைக்கு சுற்றுலாக்கள் மனோரதியப்படுத்தப்பட்டு (Romanticise), அத்துறைசார் வணிக அமைப்புக்களால் சந்தைச் சூழலாக மாற்றப்பட்டுள்ளன. அரசுகளே முன் நின்று இவற்றை வணிக மயப்படுதுவதைக் காண்கிறோம். சுற்றுலாக்கள் மூலம் நம்மிடம் விற்கப்படுபவை டிக்கட்டுகளோ, பயணப் பொதிகளோ அல்ல அங்கே பிரதான சந்தைப்பண்டம், மக்களின் சுற்றுலா அனுபவம் தொடர்பான நம்பிக்கைகள் தான். குறிப்பாக இயற்கை, சூழல், மரபுரிமை, தொல்லியல் சார்ந்து சராசரிகளுக்கு அவர்களே உருவாக்கி அளித்த வெற்று அனுபவங்கள்…

July 8, 2024

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …

June 13, 2024

எருமை அறிவு இலக்கியம் அறிவின் (knowledge) மீதா புத்திசாலித்தனத்தின் (intelligence) மீதா கவனக் குவிப்பைச்ச் செய்ய வேண்டும் என்று நண்பர் கேள்வியொன்றோடு உரையாடலொன்றை முடித்திருந்தார். விலங்கிலிருந்து உன்னித்து எழுந்த மனிதர்கள் இவ்விரண்டு செயலாலும் ஆனவர்கள்தான்.   மனிதர்களின்  அறிவு  (knowledge), இன்னொன்று அவர்களின் புத்தி கூர்மை (intelligence) இரண்டுக்குமான அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது இதைப்பற்றிய தெளிவையும் இலக்கியம் எதை அடிப்படையாகக் கொள்கின்றது என்பதையையும் காணலாம். மானிட அறிவு என்பது அடிப்படையில் உலகைப் புரிந்து கொள்வதற்கான மனிதர்களின் திறன். …

June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

April 28, 2024

சிவப்பில் உறைந்த காலம் வாசிப்பையும் எழுத்தையும்  இராணுவ ஒழுங்கிற்குக் கொண்டு வந்த பிறகு, படங்களைப் பார்பதை வெகுவாகக் குறைத்திருக்கிறேன். மிக மிகத் தெரிவு செய்து;  நண்பர்களின் பரிந்துரைகளை வடிகட்டியே படங்களைப் பார்க்கிறேன். பொழுபோக்குப் படங்களை முழுவதுமாக நிறுத்தி விட்டேன். கடைசியாக ‘பிரம்மயுகம்’ பார்த்தேன். பிடித்திருந்தது.  அனுபவக் குறிப்பொன்று என் journal இல் எழுதி வைத்திருக்கிறேன். விரிவாக எழுத வேண்டும். கொலனியம் பற்றிய ஒரு முக்கிய உரையாடல் அதில் இருக்கிறது. காலம் பற்றியும் வரலாறு பற்றியும் அதில் ஒரு…

April 25, 2024

சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன.  தேவாலயங்களுக்கு முன்னால்  மடுமாதா வருகைக்கான வரவேற்புகள்  பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக்  கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…

April 24, 2024

தும்பி : கசப்பே அண்டாத பரிசு தெரிந்தோ தற்செயலோ இலக்கியத்திலிருந்து சமூக செயற்பாட்டுக்குள் நுழையும் போது எங்களுக்குள் இருந்த குழந்தைகளாலேயே உந்தப்பட்டோம்.  முக்கியமாக இரண்டு கதைப்புத்தகங்களும் ஒரு சிறார் இதழும் எங்களுடைய முன் தெரிவுகளாக  இருந்தன. முதலாவது `குட்டி இளவரசன்`  பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட உலகின் மகத்தான கதைகளிலொன்று. நாமெல்லாம் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் ; சிலருக்கே அது ஞாபகம் இருக்கிறது என்ற  குட்டி இளவரசனின் சொற்கள் எங்களை கைபிடித்துக் கொண்டுவந்தன. அதன் பின் ஆயிஷா. …

April 21, 2024

கற்றனைத் தூறல் என்னுடைய எதிராளி கட்டுரையில்  கடந்த சில வருடங்களில் என்னுடைய நேரத்தை ஆய்வு, விமர்சனங்களுக்கு செலவழித்துவிட்டேன்.  என்னுடைய களம் கற்பனையும், புனைவும் என்பதை பின்னாளில் கண்டுகொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.  நண்பர் ஒருவர் கலை இலக்கியத்தில் இருப்பவர்கள் ஆய்வாளர்களாக இருப்பது நல்லது தானே ?  தவிர கலை இலக்கிய வாசனை சற்றும் இல்லாதவர்கள் மேற்கொள்கின்ற `துறைசார்ந்த` ஆய்வுகள் மிகவும்  ஒற்றைப்படைத்தன்மையும், இறுக்கமும் முக்கியமாக பயன் பெறுமதி குறைவாகவும் இருக்கிறதே?  அதோடு  இன்றைக்கு பேச்சாளர்கள், பட்டிமன்றக்காரர்கள் எல்லாம்,  …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’