பறவையின் பங்கு யாழ்ப்பாணப்பகுதிகளில் மா, புளி போன்ற பயன் தரும் மரங்களை அவை காய்த்து முதிரும் நிலையில் அறுவடை செய்தலை , ‘மரம் உலுப்புதல்’ என்பர். உலுப்பப்படும் போது மரத்தின் சொந்தக்காரர்கள், மரத்தை உலுப்புவர் ஆகியோருக்கு அறுவடையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் கிடைக்கும். அவற்றோடு மரத்தின் குறித்த காய், கனிகளுள்ள கிளைகள் உலுப்பப்படாது பறவைகள், விலங்குகளுக்கு விடப்படும். இப்படியொரு மரபு இருந்திருக்கிரது. பின்னர் மெல்ல மெல்ல வழங்கொழிந்தது. மரத்தின் முழு அறுவடையும் சொந்தக்காரருக்கு வந்ததுடன் அறுவடை செய்பவர் …