சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன. தேவாலயங்களுக்கு முன்னால் மடுமாதா வருகைக்கான வரவேற்புகள் பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக் கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…