‘உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் சொந்தப்பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்’ என்றார் இயக்குனர்அபாஸ் கிரயோஸ்தமி. இந்திய வணிக சினிமாவின் முன்னால் பண்பாட்டின் களத்தில் நின்று நல்ல படம் எடுப்போம் என்று நிற்பது முக்கியமான கலைத்துவ முடிவுதான். அப்படியான கலைஞர்களை நோக்கிச்செல்வதே இந்த உரையாடல்களைத் தொடக்க முக்கியமான காரணம். இலக்கியத்தில் இருந்துகொண்டு ஏனைய சமகால கலைவடிவங்களுடன் உரையாடிப்பார்ப்பது அதை எழுத்திற்கு கொண்டுவருவது மெல்ல மெல்லச் செய்தாலும் பயன் பெறுமதியோடு இருக்க வேண்டும் என்று…