August 4, 2023

சில வருடங்களுக்கு முன்பு மலையாள/ தமிழ் சினிமா நட்சத்திரமாக நன்கு அறியப்பட்ட நடிகை பார்வதி  தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்க கூட ‘மேனன்’ என்ற சாதியப் பின்னொட்டை இனிமேல் பயன் படுத்த போவதில்லை என்று அறிவித்தததோடு  தன்னுடைய உத்தியோக பூர்வ இணையப்பக்கங்கள், திரைப்படங்களில்  அவற்றை நீக்கினார்.   இந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் அது  செய்த சிறிய நற்செயல் மட்டுமல்ல அது ஒரு பெரிய காலடி. ஏனெனில் இந்திய  மனங்களை , கருத்தியல் கூட்டை வடிவமைப்பதில் இந்திய சினிமாவின்…

July 25, 2023

அரசியல் மயப்பாட்டிலிருந்தே தனிமனிதரினதும்   அமைப்பினதும் சிந்தனையும் செயல்வாதமும் அரசியல் நிலைப்பாட்டிற்குச் செல்கின்றன. அடிப்படையில் சமூகத்தில் இருக்க கூடிய  ஒன்றையொன்று அதிகாரம் செய்யக்கூடிய ‘அரசியல்’ தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வுகளை அடைவதும் அவை பற்றிய சொந்த சிந்தனைனையை வந்தடையும் போது தனி நபர்களோ அவர்கள் பங்குபற்றக்கூடிய அமைப்புகளோ அரசியல் நிலைப்பாட்டை எட்டுகின்றன. உதாரணமாக பெரியாரிய கருத்தியலை ஆதரிக்கவும் அதன் பின்னணியைக் கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை எடுக்க கூடியவர்கள்  இன, மத, சாதிய , பால்…

July 25, 2023

இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன் பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டும் ஒரு ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே…

July 25, 2023

என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில் வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக்காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டிப் பயப்படுத்த ஒடுக்கப்பட்ட சமூகமல்லாத…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’