October 7, 2024

பேற்றுக் குணுங்கு | காளம் 09 குழந்தை இல்லாத இரண்டாவது நாள்.   கடந்து சென்ற கூவும் காற்று, இவர்களின் கூடாரத்தின் மூடு துணியைச் சடசடத்துக் கொண்டிருந்தது. அத்தைக்காரியும் தாலிக்கொடியும் வெளியே தறப்பாளில்  படுத்திருந்தனர்.  வானம் ஒளிகொண்டு விரிந்து கிடந்தது. கச இருட்டிற்கு மேலே   தாரகை வீதியின் ஒளியில் முட்டிய தன் கண்கள் பளபளத்ததை தானே கண்டாள். சின்னத்தை பிள்ளையை பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்ததை கைபேசியில் அறிந்த பிறகும் மனதின் அலைவு  அடங்காமலிருந்தது….

September 30, 2024

ஒலிச்சி | காளம் 07 மாசிப்பனி,  கட்டை விரல் நுணியை மரக்கச்செய்து நுண்மையான ஊசி முனைகளால் நெருடியது. சகட்டுப் பனிக்குள்ளும் தன் நாளாந்த சடங்குகளை ஆரம்பிப்பதற்கு ஒலும்பி  பெருங்கிராய் வயல் பரப்பின் கிழக்காக நீளும் வரம்பை நெருங்கினார்.  ஒவ்வொரு நாளும் அவருக்கு வயற்கிணற்றடியில்தான் விடிய வேண்டும். கடைவாய்க்குள் வேப்பங்குச்சியை அதக்கிக்கொண்டே வரம்புகளில் நடந்து வந்தார். மென்பனியின் கசட்டு மைமலில் துலாவின் அந்தம் கரைந்து வானத்தில் சொருகியிருப்பது போன்ற பிரமையைத் தந்தது. கிணற்றை நெருங்கி  துலாவைச்சாய்த்து  பட்டை வாளியில்…

September 27, 2024

  சிதற்கால்கள் | காளம் 06  கூடாரத்தின் கண்பார்வையில் வான் வேரோடி நின்றிருந்த பெரிய பாலைமர அடியில்  நுள்ளான் அடுக்கி வைத்திருந்த விசித்திரமான பச்சைப்பாசி நிறமேறிய வெண்கற்களின் இணைவின் மேல் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். நுள்ளான் அவற்றை அக்காட்டில் கிடந்த பெரிய யானையொன்றின் என்புகள் என்றான். முகாமை அமைக்கும் போது புல்டோசர்களின் இராட்சத கரங்கள் அவற்றை வழித்துச்சென்று புதர்களோடு பிரட்டியிருந்தது. அவற்றை எடுத்துவந்து இருக்கையாக ஆக்கி இருந்தான். அவை கற்கள் போன்றே இருந்தன. மென்குளிர்வுடன் தோதாக இருந்தன. அவற்றை…

September 20, 2024

பெருநா – தெய்வம் | காளம் – 04 அருவியாற்றுக்கும்  மன்னார் மதவாச்சி வீதிக்கும் இடையில் எதிரில்  எழுந்திருந்தது இராமநாதன் நலன்புரி முகாம்.   செட்டிகுளம் மெனிக்பாமில் இருந்த அகதி முகாம்களில் இதுவே மிகப்பெரியது. இத்தனை ஆயிரம் பேர்  மிக அருகில் பார்வைத் தொலைவில் இருந்தாலும், எந்த சத்தமும் இல்லாமல் ஆற்றங்கரை அமைதியில் நின்றிருந்தது. அசாதாரணமாக இம்மனிதப்பெருக்கு அடைந்திருக்கும் இரைச்சலின்மைதான் என்ன?  கிராமங்கள் இரைவதில்லை.  வீடுகள் சனங்களின் சொற்களை வெளியில் அனுமதிப்பதில்லை. நகரங்கள் பகலில் கூச்சலிடும் விலங்குகள்….

September 9, 2024

`இருட்டின் ஆழமே மெய்யானது.  தீயும் ஒளியும்  அதில் நிகழ்ந்த தற்செயல்.  தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது.  இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே  முதல் சொல் பிறந்தது.  `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை.  தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது`  மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும்…

July 8, 2024

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …

June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’