அனுபவத்தை விற்பவர்களும் வாங்குபவர்களும் களிச் சுற்றுலாக்களுக்கும் பயணங்களுக்குமான வேறுபாட்டை பிரித்துக்கொள்வது முக்கியமானது. இன்றைக்கு சுற்றுலாக்கள் மனோரதியப்படுத்தப்பட்டு (Romanticise), அத்துறைசார் வணிக அமைப்புக்களால் சந்தைச் சூழலாக மாற்றப்பட்டுள்ளன. அரசுகளே முன் நின்று இவற்றை வணிக மயப்படுதுவதைக் காண்கிறோம். சுற்றுலாக்கள் மூலம் நம்மிடம் விற்கப்படுபவை டிக்கட்டுகளோ, பயணப் பொதிகளோ அல்ல அங்கே பிரதான சந்தைப்பண்டம், மக்களின் சுற்றுலா அனுபவம் தொடர்பான நம்பிக்கைகள் தான். குறிப்பாக இயற்கை, சூழல், மரபுரிமை, தொல்லியல் சார்ந்து சராசரிகளுக்கு அவர்களே உருவாக்கி அளித்த வெற்று அனுபவங்கள்…