September 30, 2024

ஒலிச்சி | காளம் 07 மாசிப்பனி,  கட்டை விரல் நுணியை மரக்கச்செய்து நுண்மையான ஊசி முனைகளால் நெருடியது. சகட்டுப் பனிக்குள்ளும் தன் நாளாந்த சடங்குகளை ஆரம்பிப்பதற்கு ஒலும்பி  பெருங்கிராய் வயல் பரப்பின் கிழக்காக நீளும் வரம்பை நெருங்கினார்.  ஒவ்வொரு நாளும் அவருக்கு வயற்கிணற்றடியில்தான் விடிய வேண்டும். கடைவாய்க்குள் வேப்பங்குச்சியை அதக்கிக்கொண்டே வரம்புகளில் நடந்து வந்தார். மென்பனியின் கசட்டு மைமலில் துலாவின் அந்தம் கரைந்து வானத்தில் சொருகியிருப்பது போன்ற பிரமையைத் தந்தது. கிணற்றை நெருங்கி  துலாவைச்சாய்த்து  பட்டை வாளியில்…

September 27, 2024

  சிதற்கால்கள் | காளம் 06  கூடாரத்தின் கண்பார்வையில் வான் வேரோடி நின்றிருந்த பெரிய பாலைமர அடியில்  நுள்ளான் அடுக்கி வைத்திருந்த விசித்திரமான பச்சைப்பாசி நிறமேறிய வெண்கற்களின் இணைவின் மேல் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். நுள்ளான் அவற்றை அக்காட்டில் கிடந்த பெரிய யானையொன்றின் என்புகள் என்றான். முகாமை அமைக்கும் போது புல்டோசர்களின் இராட்சத கரங்கள் அவற்றை வழித்துச்சென்று புதர்களோடு பிரட்டியிருந்தது. அவற்றை எடுத்துவந்து இருக்கையாக ஆக்கி இருந்தான். அவை கற்கள் போன்றே இருந்தன. மென்குளிர்வுடன் தோதாக இருந்தன. அவற்றை…

September 23, 2024

  செபம் | காளம் 05 நண்பரான பாஸ்ரர் நேமியனின்  கூடாரத்திற்கு செல்லும் வழியில்  நான்கைந்து பிளாக்குகள் தாண்டி அருணாச்சலம் முகாமைப் பிரிக்கும்  நீண்ட முட்கம்பி வேலியை அண்மித்தான் நுள்ளான். விடிந்ததில் இருந்து இவளின் நச்சரிப்பு தாங்காமல் ஏறுவெய்யிலுக்கு முன்பே புறப்பட்டிருந்தான்.  இவனோடு சமதையாக நடந்து வந்த அறியாத முகங்கள் சிலர் சட்டென்று தங்களைக் கலைத்துக்கொண்டு வேலியின் குறிப்பிட்ட இடங்களை நோக்கிச்சென்று பார்வையை இரண்டு திசைக்கும் எறிந்து பார்த்துக் கொண்டு வேலிகளில் இருந்த முட்கம்பிகளை நெக்கி, உட்புகுந்து…

September 20, 2024

பெருநா – தெய்வம் | காளம் – 04 அருவியாற்றுக்கும்  மன்னார் மதவாச்சி வீதிக்கும் இடையில் எதிரில்  எழுந்திருந்தது இராமநாதன் நலன்புரி முகாம்.   செட்டிகுளம் மெனிக்பாமில் இருந்த அகதி முகாம்களில் இதுவே மிகப்பெரியது. இத்தனை ஆயிரம் பேர்  மிக அருகில் பார்வைத் தொலைவில் இருந்தாலும், எந்த சத்தமும் இல்லாமல் ஆற்றங்கரை அமைதியில் நின்றிருந்தது. அசாதாரணமாக இம்மனிதப்பெருக்கு அடைந்திருக்கும் இரைச்சலின்மைதான் என்ன?  கிராமங்கள் இரைவதில்லை.  வீடுகள் சனங்களின் சொற்களை வெளியில் அனுமதிப்பதில்லை. நகரங்கள் பகலில் கூச்சலிடும் விலங்குகள்….

September 16, 2024

செட்டிகுளம் மெனிக்பாமிற்கு தெற்கே  ஒன்றரை மைல்கள் தள்ளி இருந்த  காட்டுக்குள் , நாகர்களுடைய ஈமைத்தாழிகளைத் தேடிவந்த தொல்லியல்காரர்கள் தோண்டிய  துளைகளிலொன்றை  இளம் அன்னை அகழான் வளையாக  ஆக்கிக்கொண்டது. அதே காட்டின் அடர் பகுதியொன்றில் சருகுப் புலி ஒன்றுடன்  நிகர் நின்றதில் இடது காற் தொடை கடித்துக் குதறப்பட்டு  வீறிட்டுக்கொண்டே புதருக்குள் பாய்ந்து தப்பியது  தாமசி என்ற  கணநரி. கடியுண்ட காலை இழுத்து இழுத்து வந்து அவ்வளையின் வாசலில் படுத்துக்கொண்டது. காயத்திலிருந்து பெருமளவு குருதி வெளியேறி உடல் சோர்ந்து…

September 13, 2024

  பெரிய மன்றாடியாரின் பெயரன் என்று கிழவரிடம் சொல்லுங்கள்` வாயில் காவலரிடம் சொல்லி விட்டு,  சுருவத்தடியில்  அமர்ந்து கொண்டான் உக்காரா. பணிக்கர் கிழவரின் களரிக்கு அனுமதியில்லாமல் போக முடியாது. தனக்குரிய கனம் பண்ணுகைகளை எதிர்பார்ப்பவர்.  மன்றாடியாரின் அணுக்கமான சீடப்பிள்ளை என்றாலும், இவனுக்கு அவர் பெரிதாகப் பழக்கமில்லை. சிறுவயதிலேயே தாயுடன் மதவாச்சிக்குச் சென்றுவிட்டான்.  ஆனால் அவரை பெரிய மன்றாடியாரின் கடைசி நாட்களில் அவரின் சொற்களில் இருந்து அறிந்து கொண்டவன். கால்கள் வலித்தன. செட்டி குளத்தில் உசுப்பிய மோட்டார் சைக்கிளை…

September 9, 2024

`இருட்டின் ஆழமே மெய்யானது.  தீயும் ஒளியும்  அதில் நிகழ்ந்த தற்செயல்.  தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது.  இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே  முதல் சொல் பிறந்தது.  `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை.  தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது`  மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும்…

May 1, 2024

உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’