July 8, 2024

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …

June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

May 10, 2024

பிற  வாழ்க்கைகள் வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? புத்தகங்களுக்கு நன்றி. நவீன இலக்கியத்தில், வாசிக்கும் போது வேறொரு வாழ்க்கையை வாழ முடியுமா ? அது கனவைப் போன்றதா? அல்லது ஒரு திறந்த உலக வீடியோ கேமைப் போன்றதா ? என்று ஒரு கேள்வி இரவு  இரண்டு மணிக்குக்  கேட்கப்பட்டது.  நான்கு மணிக்குப் பதில் எழுதி விட்டு உறங்கப்போனேன்.  இந்த நாட்களை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கும் அனைவரும் அன்புக்குரியோரே! நவீன இலக்கியத்தின்  சிறப்பியல்புகளில் ஒன்று,  சென்று வாழ்ந்த அனுபவத்தைத் தருவது. எல்லையற்ற…

May 9, 2024

போர்க்காலத்தில் ஏன் நாவல்கள் எழவில்லை?   நாவற்காலம் 02 ஈழத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் கூரான இன முரண்களால் எழுந்த  உள்நாட்டு யுத்தத்தோடு ஈழத்தின் நாவல் வளர்ச்சி  மெல்லச் சரிந்தது. பேரியலக்கிய வடிவமான நாவல் முயற்சிகளின்  இச்சரிவின் பின்னால் போர் இருக்கிறதா என்ற கேள்விக்கு  போரும் இருக்கிறது என்ற பதிலே சரியானது என்று நினைக்கிறேன். இச்சரிவை அக்கால சமூக, அரசியல் சூழல் இரண்டு வகையில் பாதித்தது. அதில் முதன்மையானது,   `அரசியல்` நிலைபாடுகள் நாவலின் தேவையை முழுவதுமாக `சமூக…

May 1, 2024

உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …

April 25, 2024

சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன.  தேவாலயங்களுக்கு முன்னால்  மடுமாதா வருகைக்கான வரவேற்புகள்  பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக்  கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…

April 17, 2024

  Bruce Lee’s Library எதிராளி / THE OPPONENT சமூக செயற்பாடுகளில் இருந்து வெளியேறிய பிறகு இலக்கியம் என்னை  நமட்டுச் சிரிப்புடன் தான் எதிர்கொண்டது.  முன்பிருந்தே பெரும்பாலும் தினசரி ஏதேனும் எழுதுபவன், வாசிப்பவன்.  புனைவெழுதுவதைக் கைவிடாமல் இருந்ததுதான் என் வாழ்வில் எனக்கே நான் செய்துகொண்ட முழு நற்செயல்.  தொடங்கியதெல்லாம் இலக்கியத்தில் என்பதால் அது எங்களை நீங்காமல் உண்மையாக உடனிருந்தது. புனைவு எழுதுவதோ அதை எழுதும் போதே  அதற்கான ஆய்வுகளைச் செய்வதோ பயணங்கள் போவதோ எனக்குப் பழக்கமானதும் பிடித்ததும். …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’