July 2, 2024

தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் ` அறிதல் முறைகளில்  பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல்.  மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை.  தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis  என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல.  தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு…

May 15, 2024

ஊரி : சொல்லின்  விழைவு இலக்கியத்தின் முதன்மைப் பயன் தன்னை அறிவது. சமூகத்திற்கு அவற்றில் இருந்து கிடைப்பவை மேலதிகமான பயன்கள் மட்டுமே. அறிதல் முறைகள் முதலில் தன்னிலையில் இருந்தே உருவாகின்றன.  அத்தன்னிலைகளில் இருந்து எழுந்து வருவதே அறிவியக்கம்.  ஏனெனில் இலக்கியத்தினால் கிடைக்கும் புகழ், செல்வம், அடையாளம் எல்லாமே அதன் உபரியான நிலைகள்தான். அவற்றுக்கென்று இலக்கியவாதியின் அகத்தில்  எந்த விழைவுகளும் இருக்கத் தேவையில்லை. அவருடைய புற உலக வாழ்விற்கு அவை உணவிடலாம், உதவலாம். மகிழ்வளிக்கலாம்.  எவ்வாறு இருந்த போதும் …

April 14, 2024

பறவையின் பங்கு யாழ்ப்பாணப்பகுதிகளில் மா, புளி போன்ற  பயன் தரும் மரங்களை அவை காய்த்து முதிரும் நிலையில் அறுவடை செய்தலை , ‘மரம் உலுப்புதல்’ என்பர். உலுப்பப்படும்  போது மரத்தின் சொந்தக்காரர்கள், மரத்தை உலுப்புவர் ஆகியோருக்கு அறுவடையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் கிடைக்கும். அவற்றோடு மரத்தின் குறித்த காய், கனிகளுள்ள கிளைகள் உலுப்பப்படாது பறவைகள், விலங்குகளுக்கு விடப்படும். இப்படியொரு மரபு இருந்திருக்கிரது. பின்னர் மெல்ல மெல்ல வழங்கொழிந்தது. மரத்தின் முழு அறுவடையும் சொந்தக்காரருக்கு வந்ததுடன் அறுவடை செய்பவர் …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’