July 23, 2024

அனுபவத்தை விற்பவர்களும் வாங்குபவர்களும் களிச் சுற்றுலாக்களுக்கும் பயணங்களுக்குமான வேறுபாட்டை பிரித்துக்கொள்வது முக்கியமானது. இன்றைக்கு சுற்றுலாக்கள் மனோரதியப்படுத்தப்பட்டு (Romanticise), அத்துறைசார் வணிக அமைப்புக்களால் சந்தைச் சூழலாக மாற்றப்பட்டுள்ளன. அரசுகளே முன் நின்று இவற்றை வணிக மயப்படுதுவதைக் காண்கிறோம். சுற்றுலாக்கள் மூலம் நம்மிடம் விற்கப்படுபவை டிக்கட்டுகளோ, பயணப் பொதிகளோ அல்ல அங்கே பிரதான சந்தைப்பண்டம், மக்களின் சுற்றுலா அனுபவம் தொடர்பான நம்பிக்கைகள் தான். குறிப்பாக இயற்கை, சூழல், மரபுரிமை, தொல்லியல் சார்ந்து சராசரிகளுக்கு அவர்களே உருவாக்கி அளித்த வெற்று அனுபவங்கள்…

April 25, 2024

சராசரிகளின் சந்தை மன்னார், மடுவில் மரியாளுக்கு முடிசூட்டப்பட்டு நூறாண்டுகள் நிறைவதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சி முழுவதும் அலங்காரத் தோரணங்கள் நீலமும் வெள்ளையுமாக சோடிக்கப்பட்டிருந்தன.  தேவாலயங்களுக்கு முன்னால்  மடுமாதா வருகைக்கான வரவேற்புகள்  பதாகைகள், கோலாகலமாகவிருந்தன. நண்பர் ஒருவருடன் இவற்றைப் பார்த்துக்  கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். தீடிரென்று நண்பர் `உனக்குத்தெரியுமா மடுக்கோவில் இருக்கிறது முதலொரு கண்ணகி அம்மன் கோவிலாம்` என்றான். குரலில் அத்தனை வெறுப்பு. எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்ததென்றால் அவனொன்றும் மத வெறுப்பாளன் கிடையாது. போதாதற்கு அவனுடைய…

April 12, 2024

நம்முடைய பொதுச்சமூகம் அல்லது பெரும்பான்மை சமூகம் அறியும், நம்பும் வரலாறு பழைய வரலாற்று எழுத்துமுறை சார்ந்தது. பழைய வரலாற்று எழுத்துமுறை என்றால் என்ன?  சுருக்கமாகச் சொன்னால் ஏதோவொரு அதிகார நலனுக்காக எழுதப்பட்ட வரலாறு. அது பன்மைத்துவத்தையும் நெகிழ்வையும் மாற்றம்மிக்க விசைகளையும் மறுப்பதுடன் வன்முறைகளுக்கான  விதைகளைக் கொண்டதுமாகும். அவற்றின் மையப்பகுதிகளில் அதிகாரமற்ற யாரின் குரலும் கிடையாது. பழைய வரலாற்று எழுத்துமுறை அரசர்கள், ஆதிக்கக் குலக்குழுக்கள், ஆதிக்க சாதிகள், ஆண்கள், எசமான்கள், பிரபுக்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் போன்றோரால் அவர்களைப்பற்றி அவர்களும்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’