காடெனும் தந்தை | காளம் 16 உக்காரா தாலிக்கொடியை ஏற்றிக்கொண்டு நேராக தோமையர் பிலவிற்குப் போனான். பணிக்கர் அடிவானம் வரை கையை நீட்டி இவ்வளவும் `எங்கடை` என்பார். ` தாதைப் பணிக்கனுக்கு அரசன் அளித்த நிலம்` என்று பழைய வரிவடிவில் எழுதிய பழைய செப்பேட்டின் கறுப்பு வெள்ளைப்படம் ஒன்று அவரின் கொட்டிலில் கண்ணாடிச் சட்டகத்தில் பொருத்தி வைத்திருந்தார். அச்செப்பேடு இப்பொழுது இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்வார். வவுனியா மன்னார் எல்லைக்கிராமங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு அரைச்சதுப்பும் வயல்…