இருட்சொல் | காளம் 08 சின்னத்தை பார்க்க வருகிறாள் என்றதும் அமலாவிற்குள் இருந்த இறுக்கங்களின் வடங்கள் தளர்ந்து அரவுகளென்றாகி இருள் ஆழங்களுக்குள் இறங்கிச்சென்று மறைந்தன. உக்காரா என்ற முகம் தெரியாத அந்த இளைஞன் நுள்ளானிடம் இரகசியமாக கைத்தொலைபேசி ஒன்றைக் கொடுத்திருந்தான். அதன் மூலம் தன்னுடன் பேசி, ஆகவேண்டியதை முடிக்கச் சொல்லியிருந்தான். சின்னத்தைதான் வெளியே இருந்து அவன் கேட்கும் எல்லா அலுவல்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றாடம் தீயில் நிற்கும் உணர்விலிருந்து இவள் மீண்டு விட்டாலும், அவளுக்குள் பதட்டம் ஒன்று…