July 25, 2023
– கேணிகள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் மரபுச்சின்னங்கள் – சமூக வரலாற்றை எழுதுதலும் அடையாளமும். ஒடுக்கப்படுகின்ற இனம் தன்னுடைய இனவரலாற்றை நிகழ்காலத்திலிருந்து ஒழுங்குபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. அது இதுகாறும் சொல்லப்பட்ட கடவுள்களின், அரசர்களின், முதலாளிகளின், பணக்காரர்களின் வரலாறாக எழுதப்படலாகாது. ஒரு இனம் தன்னுடைய இனவரைபின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதவேண்டும். அது விளிம்புநிலை சமூகங்களின், ஒடுக்கப்பட்டவர்களின், குரலற்றுப்போனவர்களின், குரலற்று இருப்பவர்களின் நிலைமைகளையும் உள்வாங்கி பன்மைத்துவ நிலையில் எழுதுப்படுவதாக இருக்கவேண்டும். மன்னர்களின் வரலாற்றையே வரலாறாக எழுதும் ”மேலிருந்து கீழ்நோக்குதல்”…