September 16, 2024

செட்டிகுளம் மெனிக்பாமிற்கு தெற்கே  ஒன்றரை மைல்கள் தள்ளி இருந்த  காட்டுக்குள் , நாகர்களுடைய ஈமைத்தாழிகளைத் தேடிவந்த தொல்லியல்காரர்கள் தோண்டிய  துளைகளிலொன்றை  இளம் அன்னை அகழான் வளையாக  ஆக்கிக்கொண்டது. அதே காட்டின் அடர் பகுதியொன்றில் சருகுப் புலி ஒன்றுடன்  நிகர் நின்றதில் இடது காற் தொடை கடித்துக் குதறப்பட்டு  வீறிட்டுக்கொண்டே புதருக்குள் பாய்ந்து தப்பியது  தாமசி என்ற  கணநரி. கடியுண்ட காலை இழுத்து இழுத்து வந்து அவ்வளையின் வாசலில் படுத்துக்கொண்டது. காயத்திலிருந்து பெருமளவு குருதி வெளியேறி உடல் சோர்ந்து…

April 21, 2024

கற்றனைத் தூறல் என்னுடைய எதிராளி கட்டுரையில்  கடந்த சில வருடங்களில் என்னுடைய நேரத்தை ஆய்வு, விமர்சனங்களுக்கு செலவழித்துவிட்டேன்.  என்னுடைய களம் கற்பனையும், புனைவும் என்பதை பின்னாளில் கண்டுகொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.  நண்பர் ஒருவர் கலை இலக்கியத்தில் இருப்பவர்கள் ஆய்வாளர்களாக இருப்பது நல்லது தானே ?  தவிர கலை இலக்கிய வாசனை சற்றும் இல்லாதவர்கள் மேற்கொள்கின்ற `துறைசார்ந்த` ஆய்வுகள் மிகவும்  ஒற்றைப்படைத்தன்மையும், இறுக்கமும் முக்கியமாக பயன் பெறுமதி குறைவாகவும் இருக்கிறதே?  அதோடு  இன்றைக்கு பேச்சாளர்கள், பட்டிமன்றக்காரர்கள் எல்லாம்,  …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’