July 25, 2023
எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த ஒருநபர் அங்கே வருகிறார். அவர் பத்திரிக்கை படிக்க விரும்புகிறார் ஆனால் மற்றவர் இவரைக்கவனிக்காமல் தொடர்ந்தும் வாசித்துக் கொண்டிருக்கிறார் உடனே இவர் அவரை ‘பேப் – பறையா வாசிக்கிறாய்?’ என்கிறார், உடனே வாசித்துக் கொண்டிருப்பவர் சளைக்காமல் ‘முக்குவரறிவித்தல் வாசிக்கிறன்’ என்று சடைந்து சொல்கின்றார். அவர்…