அரசியல் மயப்பாட்டிலிருந்தே தனிமனிதரினதும் அமைப்பினதும் சிந்தனையும் செயல்வாதமும் அரசியல் நிலைப்பாட்டிற்குச் செல்கின்றன. அடிப்படையில் சமூகத்தில் இருக்க கூடிய ஒன்றையொன்று அதிகாரம் செய்யக்கூடிய ‘அரசியல்’ தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வுகளை அடைவதும் அவை பற்றிய சொந்த சிந்தனைனையை வந்தடையும் போது தனி நபர்களோ அவர்கள் பங்குபற்றக்கூடிய அமைப்புகளோ அரசியல் நிலைப்பாட்டை எட்டுகின்றன. உதாரணமாக பெரியாரிய கருத்தியலை ஆதரிக்கவும் அதன் பின்னணியைக் கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை எடுக்க கூடியவர்கள் இன, மத, சாதிய , பால்…