மரபுரிமைகளை அறிதல், ஆவணப்படுத்தல், அவற்றைக்கொண்டாடுதல் என்ற அடிப்படைகளைக் கொண்ட ‘மரபுரிமை நடையான’ தொன்ம யாத்திரை ஐந்து நடைகளை நிறைவு செய்து ஆறாவது நடைக்குத் தயாராகியுள்ளது. இவ்விடத்தில் மரபுரிமைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் மீது செல்வாக்குடன் இருக்கக் கூடிய இனவாதம், சாதி, மதச்சார்பு, ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குதன்மைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தெளிவு படுத்தல் அவசியமாகவிருக்கின்றது. ஏற்கனவே தேவாலயங்களின் நகரம் என்ற தொன்மயாத்திரை ஊர்காவற்றுறையின் காலனிய காலத்து தேவாலயங்களை நோக்கியதாயும், ஆறாவது தொன்ம யாத்திரை நாட்டுப்புறவியலுடன் இணைந்திருக்கும்…