April 21, 2024

கற்றனைத் தூறல் என்னுடைய எதிராளி கட்டுரையில்  கடந்த சில வருடங்களில் என்னுடைய நேரத்தை ஆய்வு, விமர்சனங்களுக்கு செலவழித்துவிட்டேன்.  என்னுடைய களம் கற்பனையும், புனைவும் என்பதை பின்னாளில் கண்டுகொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.  நண்பர் ஒருவர் கலை இலக்கியத்தில் இருப்பவர்கள் ஆய்வாளர்களாக இருப்பது நல்லது தானே ?  தவிர கலை இலக்கிய வாசனை சற்றும் இல்லாதவர்கள் மேற்கொள்கின்ற `துறைசார்ந்த` ஆய்வுகள் மிகவும்  ஒற்றைப்படைத்தன்மையும், இறுக்கமும் முக்கியமாக பயன் பெறுமதி குறைவாகவும் இருக்கிறதே?  அதோடு  இன்றைக்கு பேச்சாளர்கள், பட்டிமன்றக்காரர்கள் எல்லாம்,  …

April 14, 2024

பறவையின் பங்கு யாழ்ப்பாணப்பகுதிகளில் மா, புளி போன்ற  பயன் தரும் மரங்களை அவை காய்த்து முதிரும் நிலையில் அறுவடை செய்தலை , ‘மரம் உலுப்புதல்’ என்பர். உலுப்பப்படும்  போது மரத்தின் சொந்தக்காரர்கள், மரத்தை உலுப்புவர் ஆகியோருக்கு அறுவடையில் குறிப்பிட்ட அளவு பங்குகள் கிடைக்கும். அவற்றோடு மரத்தின் குறித்த காய், கனிகளுள்ள கிளைகள் உலுப்பப்படாது பறவைகள், விலங்குகளுக்கு விடப்படும். இப்படியொரு மரபு இருந்திருக்கிரது. பின்னர் மெல்ல மெல்ல வழங்கொழிந்தது. மரத்தின் முழு அறுவடையும் சொந்தக்காரருக்கு வந்ததுடன் அறுவடை செய்பவர் …

August 18, 2023

இராவணன்  பற்றிச் சமூக வலைத்தளங்கள் வழியே கட்டமைக்கப்படும் பெருமிதங்களும், தகவல் பிழைகளும் தொடர்ச்சியாக  இணையத்தை மட்டும் தங்களின் அறிதல் வழியாகக் கொண்ட குறிப்பிட்ட அளவு மக்களை வரலாறு, பண்பாடு தொடர்பில் புரிதலற்ற நபர்களாக கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன. தொன்மங்களாக கருதப்படக்கூடிய புராணங்கள்/ இதிகாசங்களையும், வரலாற்றையும் வேறுபடுத்திக் காணத போது சமூகத்தின் பொது அபிப்பிராயத்திலும் பொதுப்புத்தியிலும் அறியாமையின் அபாயங்கள் கிளைவிடுகின்றன. இலங்கையின் பாராளுமன்றத்தில் ஒரு சிங்கள அரசியல்வாதி இராவணனை சிங்கள மன்னன் என்கிறார். இந்தா நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று தமிழ்…

July 25, 2023

சனநாயகம் புழக்கத்திற்குரிய வெளியாக திறந்து விடப்பட்ட பிறகு  மக்களின் பங்குபற்றுதலுக்கான வடிவங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் சமூகத்தின் கூட்டான மனநிலை, சனநாயக வடிவங்களை எதிர்ப்புணர்வுக்கும், போராடுதலுக்கும் தெரிவு செய்யும் காலத்தை தொடங்கியிருக்கிறது. அசலான சமூக வரலாறு என்பது பண்பாட்டு அடக்கு முறைகளையும் அதெற்கெதிரான போராட்டங்களையும் கொண்டிருக்கிறது. கடந்து சென்ற  நாட்களில் இலங்கையில் நடைபெற்ற சனநாயகப்போராட்டங்களில் நிலம் மற்றும் அதனுடைய மரபுரிமைகள் தொடர்ப்பான போராட்டங்கள் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன அரசியல் அதிகாரம், பண்பாட்டு அதிகாரம், பொருளாதார அதிகாரம் முதலானவற்றினால்…

July 25, 2023

– கேணிகள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் மரபுச்சின்னங்கள் – சமூக வரலாற்றை எழுதுதலும் அடையாளமும். ஒடுக்கப்படுகின்ற இனம் தன்னுடைய இனவரலாற்றை நிகழ்காலத்திலிருந்து ஒழுங்குபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. அது இதுகாறும் சொல்லப்பட்ட கடவுள்களின், அரசர்களின், முதலாளிகளின், பணக்காரர்களின் வரலாறாக  எழுதப்படலாகாது. ஒரு இனம் தன்னுடைய இனவரைபின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதவேண்டும். அது விளிம்புநிலை சமூகங்களின், ஒடுக்கப்பட்டவர்களின், குரலற்றுப்போனவர்களின், குரலற்று இருப்பவர்களின் நிலைமைகளையும்  உள்வாங்கி பன்மைத்துவ நிலையில் எழுதுப்படுவதாக இருக்கவேண்டும்.   மன்னர்களின் வரலாற்றையே வரலாறாக எழுதும் ”மேலிருந்து கீழ்நோக்குதல்”…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’