April 11, 2024
நிலத்தினதும் நட்சத்திரங்களினதும் வரைபடம் என்ற என்னுடைய குறிப்பை வாசித்த நண்பர் ஒருவர் ஞாபக சத்தி / நினைவாற்றல் பற்றிக் கேட்டிருந்தார். குறிப்பாகக் கல்வி, கலை இலக்கியத்தில் அதன் பயன் பற்றியும் மனனம் செய்தல் போன்ற ஞாபகத்தை நிலைப்படுத்தும் செயற்பாடுகள் பற்றியும் உரையாடல் ஒன்றைச் செய்யலாமா என்றார். என்னளவில் அவற்றைப்பற்றிய புரிதல்களை உரையாடப் பார்க்கிறேன் என்றேன். மனித நினைவாற்றல் என்பது அவர்களின் பரிணாம வளர்ச்சியோடு மேம்பாடு அடைந்து வந்த ஒன்று. மொழி நிகழ்கின்ற முக்கியமான வெளி. நினைவாற்றலை நிலைபடுத்தல்…