பேற்றுக் குணுங்கு | காளம் 09 குழந்தை இல்லாத இரண்டாவது நாள். கடந்து சென்ற கூவும் காற்று, இவர்களின் கூடாரத்தின் மூடு துணியைச் சடசடத்துக் கொண்டிருந்தது. அத்தைக்காரியும் தாலிக்கொடியும் வெளியே தறப்பாளில் படுத்திருந்தனர். வானம் ஒளிகொண்டு விரிந்து கிடந்தது. கச இருட்டிற்கு மேலே தாரகை வீதியின் ஒளியில் முட்டிய தன் கண்கள் பளபளத்ததை தானே கண்டாள். சின்னத்தை பிள்ளையை பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்ததை கைபேசியில் அறிந்த பிறகும் மனதின் அலைவு அடங்காமலிருந்தது….