July 8, 2024
வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள் என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …