October 7, 2024

பேற்றுக் குணுங்கு | காளம் 09 குழந்தை இல்லாத இரண்டாவது நாள்.   கடந்து சென்ற கூவும் காற்று, இவர்களின் கூடாரத்தின் மூடு துணியைச் சடசடத்துக் கொண்டிருந்தது. அத்தைக்காரியும் தாலிக்கொடியும் வெளியே தறப்பாளில்  படுத்திருந்தனர்.  வானம் ஒளிகொண்டு விரிந்து கிடந்தது. கச இருட்டிற்கு மேலே   தாரகை வீதியின் ஒளியில் முட்டிய தன் கண்கள் பளபளத்ததை தானே கண்டாள். சின்னத்தை பிள்ளையை பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்ததை கைபேசியில் அறிந்த பிறகும் மனதின் அலைவு  அடங்காமலிருந்தது….

October 4, 2024

இருட்சொல் | காளம் 08 சின்னத்தை பார்க்க வருகிறாள் என்றதும் அமலாவிற்குள் இருந்த இறுக்கங்களின் வடங்கள் தளர்ந்து அரவுகளென்றாகி இருள் ஆழங்களுக்குள் இறங்கிச்சென்று மறைந்தன. உக்காரா என்ற முகம் தெரியாத அந்த இளைஞன் நுள்ளானிடம் இரகசியமாக கைத்தொலைபேசி ஒன்றைக் கொடுத்திருந்தான். அதன் மூலம் தன்னுடன் பேசி, ஆகவேண்டியதை முடிக்கச் சொல்லியிருந்தான். சின்னத்தைதான் வெளியே இருந்து அவன் கேட்கும்  எல்லா அலுவல்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றாடம் தீயில் நிற்கும் உணர்விலிருந்து இவள் மீண்டு விட்டாலும், அவளுக்குள் பதட்டம் ஒன்று…

September 27, 2024

  சிதற்கால்கள் | காளம் 06  கூடாரத்தின் கண்பார்வையில் வான் வேரோடி நின்றிருந்த பெரிய பாலைமர அடியில்  நுள்ளான் அடுக்கி வைத்திருந்த விசித்திரமான பச்சைப்பாசி நிறமேறிய வெண்கற்களின் இணைவின் மேல் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். நுள்ளான் அவற்றை அக்காட்டில் கிடந்த பெரிய யானையொன்றின் என்புகள் என்றான். முகாமை அமைக்கும் போது புல்டோசர்களின் இராட்சத கரங்கள் அவற்றை வழித்துச்சென்று புதர்களோடு பிரட்டியிருந்தது. அவற்றை எடுத்துவந்து இருக்கையாக ஆக்கி இருந்தான். அவை கற்கள் போன்றே இருந்தன. மென்குளிர்வுடன் தோதாக இருந்தன. அவற்றை…

September 23, 2024

  செபம் | காளம் 05 நண்பரான பாஸ்ரர் நேமியனின்  கூடாரத்திற்கு செல்லும் வழியில்  நான்கைந்து பிளாக்குகள் தாண்டி அருணாச்சலம் முகாமைப் பிரிக்கும்  நீண்ட முட்கம்பி வேலியை அண்மித்தான் நுள்ளான். விடிந்ததில் இருந்து இவளின் நச்சரிப்பு தாங்காமல் ஏறுவெய்யிலுக்கு முன்பே புறப்பட்டிருந்தான்.  இவனோடு சமதையாக நடந்து வந்த அறியாத முகங்கள் சிலர் சட்டென்று தங்களைக் கலைத்துக்கொண்டு வேலியின் குறிப்பிட்ட இடங்களை நோக்கிச்சென்று பார்வையை இரண்டு திசைக்கும் எறிந்து பார்த்துக் கொண்டு வேலிகளில் இருந்த முட்கம்பிகளை நெக்கி, உட்புகுந்து…

September 20, 2024

பெருநா – தெய்வம் | காளம் – 04 அருவியாற்றுக்கும்  மன்னார் மதவாச்சி வீதிக்கும் இடையில் எதிரில்  எழுந்திருந்தது இராமநாதன் நலன்புரி முகாம்.   செட்டிகுளம் மெனிக்பாமில் இருந்த அகதி முகாம்களில் இதுவே மிகப்பெரியது. இத்தனை ஆயிரம் பேர்  மிக அருகில் பார்வைத் தொலைவில் இருந்தாலும், எந்த சத்தமும் இல்லாமல் ஆற்றங்கரை அமைதியில் நின்றிருந்தது. அசாதாரணமாக இம்மனிதப்பெருக்கு அடைந்திருக்கும் இரைச்சலின்மைதான் என்ன?  கிராமங்கள் இரைவதில்லை.  வீடுகள் சனங்களின் சொற்களை வெளியில் அனுமதிப்பதில்லை. நகரங்கள் பகலில் கூச்சலிடும் விலங்குகள்….

September 16, 2024

செட்டிகுளம் மெனிக்பாமிற்கு தெற்கே  ஒன்றரை மைல்கள் தள்ளி இருந்த  காட்டுக்குள் , நாகர்களுடைய ஈமைத்தாழிகளைத் தேடிவந்த தொல்லியல்காரர்கள் தோண்டிய  துளைகளிலொன்றை  இளம் அன்னை அகழான் வளையாக  ஆக்கிக்கொண்டது. அதே காட்டின் அடர் பகுதியொன்றில் சருகுப் புலி ஒன்றுடன்  நிகர் நின்றதில் இடது காற் தொடை கடித்துக் குதறப்பட்டு  வீறிட்டுக்கொண்டே புதருக்குள் பாய்ந்து தப்பியது  தாமசி என்ற  கணநரி. கடியுண்ட காலை இழுத்து இழுத்து வந்து அவ்வளையின் வாசலில் படுத்துக்கொண்டது. காயத்திலிருந்து பெருமளவு குருதி வெளியேறி உடல் சோர்ந்து…

September 9, 2024

`இருட்டின் ஆழமே மெய்யானது.  தீயும் ஒளியும்  அதில் நிகழ்ந்த தற்செயல்.  தந்தையும் தாயுமற்ற ஒற்றை நிகழ்வு. அக்கணமே தோன்றி அக்கணமே இருந்தது.  இருளின் மேல் மலர்ந்த இந்நிகழ்விலே  முதல் சொல் பிறந்தது.  `மா` எனபதே அது. அதில் உருவாகினள் மூதன்னை.  தற்செயல்களால் சூழப்பட்டு இருளின் ஆழத்தில் காலமற்றுக்கிடந்தவளைத் தீண்டி அறிந்தது தீ. ஆதலால் அது தீ எனப்பட்டது`  மந்தணமெனக் காதில் விழுந்து கொண்டிருந்த இளம் பாணர்களின் முது பாடல்கள் துண்டு துண்டாகச் செவிப்பட்டு உள்ளம் தொகுத்தவை மட்டும்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’