திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்’ என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம் அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் கூடப்…