September 23, 2024
செபம் | காளம் 05 நண்பரான பாஸ்ரர் நேமியனின் கூடாரத்திற்கு செல்லும் வழியில் நான்கைந்து பிளாக்குகள் தாண்டி அருணாச்சலம் முகாமைப் பிரிக்கும் நீண்ட முட்கம்பி வேலியை அண்மித்தான் நுள்ளான். விடிந்ததில் இருந்து இவளின் நச்சரிப்பு தாங்காமல் ஏறுவெய்யிலுக்கு முன்பே புறப்பட்டிருந்தான். இவனோடு சமதையாக நடந்து வந்த அறியாத முகங்கள் சிலர் சட்டென்று தங்களைக் கலைத்துக்கொண்டு வேலியின் குறிப்பிட்ட இடங்களை நோக்கிச்சென்று பார்வையை இரண்டு திசைக்கும் எறிந்து பார்த்துக் கொண்டு வேலிகளில் இருந்த முட்கம்பிகளை நெக்கி, உட்புகுந்து…