July 25, 2023
ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்த்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ…