May 1, 2024
உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல் இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள் மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன. குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …