July 2, 2024

தொகுத்துக்கொள்ளுதல்   `திருப்பொற்சுண்ணம் ` அறிதல் முறைகளில்  பிரதானமாக இரண்டு செயல்கள் உண்டு. பகுத்தலும் தொகுத்தலும். அறிபவற்றைப் பகுத்துப்பகுத்துச் சென்று உண்மையை அடைவது பகுத்தல். அறிபவற்றை ஒட்டுமொத்தமாக தொடர்புபடுத்தி அல்லது கோர்த்து முழுச் சித்திரத்தை அடைவது தொகுத்துக்கொள்ளுதல்.  மனிதர்களின் மேம்பட்ட அறிதல் வடிவங்களில் ஒன்றான இலக்கியத்தில் இவ்விரண்டும் அடிப்படையானவை.  தொகுத்தலுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லாக synthesis  என்பதைப் பாவிக்கலாம் என்று நினைக்கிறேன். தொகுத்துக்கொள்ளுதல் என்பது வெறுமனே கூட்டிச் சேர்ப்பது அல்ல.  தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு போன்ற அறிவுச்செயன்முறைக்கு…

April 21, 2024

கற்றனைத் தூறல் என்னுடைய எதிராளி கட்டுரையில்  கடந்த சில வருடங்களில் என்னுடைய நேரத்தை ஆய்வு, விமர்சனங்களுக்கு செலவழித்துவிட்டேன்.  என்னுடைய களம் கற்பனையும், புனைவும் என்பதை பின்னாளில் கண்டுகொண்டேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.  நண்பர் ஒருவர் கலை இலக்கியத்தில் இருப்பவர்கள் ஆய்வாளர்களாக இருப்பது நல்லது தானே ?  தவிர கலை இலக்கிய வாசனை சற்றும் இல்லாதவர்கள் மேற்கொள்கின்ற `துறைசார்ந்த` ஆய்வுகள் மிகவும்  ஒற்றைப்படைத்தன்மையும், இறுக்கமும் முக்கியமாக பயன் பெறுமதி குறைவாகவும் இருக்கிறதே?  அதோடு  இன்றைக்கு பேச்சாளர்கள், பட்டிமன்றக்காரர்கள் எல்லாம்,  …

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’