July 8, 2024

வானவில் நண்பர்கள் : துக்கமும் விடுவிப்பும் நகுலாத்தை நாவலில் வரக்கூடிய பிரதான பாத்திரங்களான தாமரைக்கும் வெரோனிகாவிற்குமான உறவை எங்கேயும் பூடகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  நாவலை வாசித்தவர்களில் பலர் அவர்களை நண்பர்கள் என்றே  குறிப்பிடுவதை சிறுபுன்னகையுடன் கடந்து விடுவேன்.நாவலை எழுதிக்கொண்டிருக்கும் போது அதன் முற்பாதியில் தாமரையின் பேத்தியாரும் ஆத்தையின் பூசாரியுமான ஆச்சியின் வாயால் அவர்களைக் காதலர்களாக ஏற்றுக்கொள்ளத்தக்க வார்த்தையொன்றையேனும் சொல்லிவிடுவாள்  என்று நம்பினேன். மரபு ஊறிய உடலும் நெகிழ்ந்து மேலெழத் தயாரான மனமும் கொண்ட பாத்திரமவள். …

July 25, 2023

– கேணிகள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் மரபுச்சின்னங்கள் – சமூக வரலாற்றை எழுதுதலும் அடையாளமும். ஒடுக்கப்படுகின்ற இனம் தன்னுடைய இனவரலாற்றை நிகழ்காலத்திலிருந்து ஒழுங்குபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. அது இதுகாறும் சொல்லப்பட்ட கடவுள்களின், அரசர்களின், முதலாளிகளின், பணக்காரர்களின் வரலாறாக  எழுதப்படலாகாது. ஒரு இனம் தன்னுடைய இனவரைபின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதவேண்டும். அது விளிம்புநிலை சமூகங்களின், ஒடுக்கப்பட்டவர்களின், குரலற்றுப்போனவர்களின், குரலற்று இருப்பவர்களின் நிலைமைகளையும்  உள்வாங்கி பன்மைத்துவ நிலையில் எழுதுப்படுவதாக இருக்கவேண்டும்.   மன்னர்களின் வரலாற்றையே வரலாறாக எழுதும் ”மேலிருந்து கீழ்நோக்குதல்”…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’