June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

May 28, 2024

ஆறு கால்களால் நடக்கும் பெண் இரண்டு வாரங்களாக பயணத்திலேயே  இருக்கிறேன். பெரிதாக எழுதவில்லை. வாசித்தேன் .பெரும்பாலான பயணங்களை குறிப்புகளாக சுருக்கி விட முடியாது,   இந்த ஆறு மாதங்களில்  பயணம் செய்த  சில இடங்கள் பற்றிய பயணக் கட்டுரைகள் கிடப்பில் இருக்கின்றன.  கொழும்பின் இரவுத்தெருக்களில் , உட்சந்துகளில் ஐந்து நாட்கள் தொடர்ந்து அலைந்தேன்.  நானொரு கிராமத்தான். நகரமென்றாலே அலுத்துக்கொள்பவன். பதட்டத்தில் வழிமாறக் கூடியவன்.  நகரம் என்பது வெளியில் எவ்வளவு விரிந்து உயர்ந்து கிடக்கிறதோ அதைவிட பல படிவுகள்…

April 9, 2024

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். இரவுப்பயணம், பக்கத்தில் தன்னுடைய ஐம்பதுகளில் இருந்த நபரொருவர் அமர்ந்து வந்தார். அடிப்படையான விசாரிப்புகள், புன்னகையோடு அமைதியாகிவிட்டோம். பகல் வெக்கையின் களைப்பு உடம்பை வறட்டியிருந்ததால்,  கொஞ்சநேரம் வாசித்து விட்டு உறங்கி விட்டேன். நள்ளிரவிற்குப் பிறகு திடுக்கிட்டு எழுந்து  யன்னலால் பார்த்தேன். கிராமங்களின் தோற்றங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிங்களக் கிராமங்களா, தமிழ்க் கிராமங்களா என்று  மட்டுப்பிடிக்க முடியவில்லை. கைபேசியை எடுக்கப் போன போது பக்கத்தில் இருந்தவர்  மதவாச்சி நெருங்குது என்றார். நான் வெளியில் பார்த்தேன் உறுதிப்படுத்த…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’