October 18, 2024
கோடையின் முடிவு | காளம் 11 ஐப்பசிக்கு இன்னும் சில நாட்களே இருந்தது, அந்தி இளவெய்யில் சரிந்து செம்மஞ்சள் ஒளி, புழுதிப் புகாரின் மீது விழுந்து நுண்தூசிகள் மிதந்தலைவதைக் காட்டியது, குளிர் காற்று அருவியாற்றின் பக்கமாக காட்டுக்குள் இருந்து தாழ்ந்து இறங்கிக் கூதலிட்டுச் சென்றது. அக்காற்றசைவு வெய்யிலைத் தொட்டது போன்ற எந்தக் காட்சியும் தோன்றவில்லை. தூரத்தில் எங்கோ மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். காட்டுப்பக்கம் உச்சி வானில் மெல்லிருள் திரண்டிருந்தது. முகாம் வாசிகள் எல்லோரும் அதைக் கண்டனர். குழந்தைகள்…