இரு பெண்கள் | காளம் 17 ஆற்றுப்பக்கம் போனவர்களைக் குளவிகள் கொட்டியிருந்தன. மழைக்குப் பின்னர் ஆற்றங்கரைகளில் உள்ள மரங்களில் அவை கூடெடுத்திருக்கும். ஆற்றுக்குள் குதிப்பதற்கு மரக்கிளைகளில் ஏறி அவற்றைக் கலைத்து விட்டிருக்கிறார்கள். அம்புலன்ஸ் வண்டிகள் முகாமிற்குள் வந்து அவர்களை ஏற்றிச்சென்றன. பாஸ்ரர் நேமியன் குளவி கொட்டியவர்களின் குடும்பங்களைச் சென்று பார்ப்போம் என்று இவனை அழைத்து வந்திருந்தார். அவர்களில் பெரும்பாலனவர்கள் சபைக்கு வருபவர்கள் என்பதால் இவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. எதற்கென்றாலும் பாஸ்ரரை அழைத்துப் பழகிவிட்டனர். இவரும் ஓடிச்சென்று நிற்பார்….