October 7, 2024

பேற்றுக் குணுங்கு | காளம் 09 குழந்தை இல்லாத இரண்டாவது நாள்.   கடந்து சென்ற கூவும் காற்று, இவர்களின் கூடாரத்தின் மூடு துணியைச் சடசடத்துக் கொண்டிருந்தது. அத்தைக்காரியும் தாலிக்கொடியும் வெளியே தறப்பாளில்  படுத்திருந்தனர்.  வானம் ஒளிகொண்டு விரிந்து கிடந்தது. கச இருட்டிற்கு மேலே   தாரகை வீதியின் ஒளியில் முட்டிய தன் கண்கள் பளபளத்ததை தானே கண்டாள். சின்னத்தை பிள்ளையை பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்ததை கைபேசியில் அறிந்த பிறகும் மனதின் அலைவு  அடங்காமலிருந்தது….

June 6, 2024

வாசகரைத் தேடுதல் : தெய்வம் போலொரு தனிமை ஈழத்து எழுத்தாளார்களில் பெரும்பான்மையானோர் மேடைகளில் சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அழுவாரைப்போல் நோகும் விடயம் , யாரும் வாசிப்பதில்லை ` என்பது. அக்குரலில் உள்ள உளச்சோர்வை காணும் போதெல்லாம் எழுத்தாளர்களால் மட்டுமே பெரும்பாலும் நிரம்பி இருக்கும் இலக்கியச் சபைகள் தலையை ஆட்டி `உண்மைதான் தோழர்` என்று வழிமொழியும். சதா சர்வ காலமும் வாசகரைத்தேடித்தேடி அலைந்து சோர்ந்தே இவர்களின் வாழ்நாள் தெய்ந்தழிந்து போய்விடுகிறது. புறக்கணிக்கப்பட்ட குழந்தையைப் போல் ஒருகட்டத்தில் ஒடுங்கிவிடுகிறது மனது….

May 1, 2024

உழவாரப் பணி – நாவற்காலம் -01 ஈழத்தின் நாவல் வளர்ச்சியில் எண்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த நாவல் களத்தை உரையாடலுக்கு எடுக்கிறேன். போரும் வாழ்வுமாக  இருந்த நிலம் இது. குறித்த நாட்களில் எழுந்த  இலக்கியங்களில் கதை வடிவங்களான சிறுகதை, நாவல்  இரண்டையும் விட கவிதை உச்சங்களையடைந்தது. கதை வடிவங்கள்   மிகக் குறைவாகவும் பெரும்பான்மையானவை இலக்கிய அழகியல் குன்றியும் எழுந்தன.  குறிப்பாக நாவல் இலக்கியம், ஏற்கனவே இருந்த  சீரான வளர்ச்சி அப்படியே சரிந்து தடுமாறியது.` நாவற்காலம்` என்ற இத்தொடரில் …

December 27, 2023

‘உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்றால், உங்கள் சொந்தப்பண்பாட்டில் நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்’ என்றார் இயக்குனர்அபாஸ் கிரயோஸ்தமி. இந்திய வணிக சினிமாவின் முன்னால் பண்பாட்டின் களத்தில் நின்று நல்ல படம் எடுப்போம் என்று நிற்பது  முக்கியமான கலைத்துவ முடிவுதான். அப்படியான கலைஞர்களை நோக்கிச்செல்வதே இந்த உரையாடல்களைத் தொடக்க முக்கியமான காரணம்.  இலக்கியத்தில் இருந்துகொண்டு ஏனைய சமகால கலைவடிவங்களுடன் உரையாடிப்பார்ப்பது  அதை எழுத்திற்கு கொண்டுவருவது மெல்ல மெல்லச் செய்தாலும் பயன் பெறுமதியோடு இருக்க வேண்டும் என்று…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’