
இராவணன் பற்றிச் சமூக வலைத்தளங்கள் வழியே கட்டமைக்கப்படும் பெருமிதங்களும், தகவல் பிழைகளும் தொடர்ச்சியாக இணையத்தை மட்டும் தங்களின் அறிதல் வழியாகக் கொண்ட குறிப்பிட்ட அளவு மக்களை வரலாறு, பண்பாடு தொடர்பில் புரிதலற்ற நபர்களாக கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன. தொன்மங்களாக கருதப்படக்கூடிய புராணங்கள்/ இதிகாசங்களையும், வரலாற்றையும் வேறுபடுத்திக் காணத போது சமூகத்தின் பொது அபிப்பிராயத்திலும் பொதுப்புத்தியிலும் அறியாமையின் அபாயங்கள் கிளைவிடுகின்றன. இலங்கையின் பாராளுமன்றத்தில் ஒரு சிங்கள அரசியல்வாதி இராவணனை சிங்கள மன்னன் என்கிறார். இந்தா நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று தமிழ்…