இயற்கை மற்றும் சமூகச்சூழமைப்பில் மனிதர்கள் இயங்கும் முறையும் அவர்களின் நடத்தை முறையும்தான் உளவியலின் அடிப்படைகள். -மிக்காயில் பக்தின் அன்பை ஒரு செயல்வடிவமாக, செயலூக்கத்துடன் இணைத்து நிகழத்தக்க கலையாக அணுகுவதையே விரும்புகிறேன். ஒவ்வொருத்தரின் இருப்பையும் அவர்களுடன் இச்சமூகம் கொண்டிருக்கும் கொடுத்து வாங்குகின்ற பண்பையும் பிரக்ஞை பூர்வமாக அவர் வாழ்ந்த சூழலில் அவர்தம் செயல்களினால் புரிந்துகொள்வது பொருத்தமானது. குமாரதேவன் பற்றிய ஞாபகங்களை அவருடைய தமிழ்ச்சூழலின் மீதான் பங்களிப்பை அவ்வாறு அணுகுதலே அவர் மீதிருக்கும் அன்பின் ஆகக்கூடிய செயலாக இருக்கும் என்று…