July 25, 2023

  மறைந்து போன அத்தனை தலைமுறைகளின் மரபுகளும், வாழ்ந்திருப்பவர்களின் மூளையை அழுத்திக்கொண்டிருக்கின்றன.-கார்ல் மார்க்ஸ் பொருட்களும் சேணங்களும் மனிதர்களைச் சவாரி செய்கின்றன.-எமர்சன் 1 ஈழத்தில் காணப்படக்கூடிய கலாசார மரபுரிமைகளுக்குள் அதனுடைய கட்டடக்கலைகளும் கட்டட மரபும் பிடித்துக்கொள்கின்ற இடம் முக்கியமானது. ஒரு கட்டடத்தை; அது நிரப்பியுள்ள வெளியினதும், அதை சூழ்ந்துள்ள வெளியினதும் அக, புறவயமான வரலாற்றுப் பின் புலம் , சமூக அர்த்தப்பாடு, அழகியல் என்பவற்றைக்கொண்டு அவற்றை மரபுரிமைகளாகக் கருதுகின்றோம். ஆனால் பொதுப்புத்தியில், இக்கட்டடங்களை வாசிக்கும்போது நம்மிடம் அரசியல் மயமற்ற…

July 25, 2023

இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. குறித்த துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும் பயன்பாட்டிலும்…

July 25, 2023

என்னுடைய தம்பியின் சிறுபிராயத்தில் வீட்டிற்கு வரும் ’வெள்ளை’ என்ற மரமேறும் தொழிலாளியைக்காட்டிப் பயப்படுத்தி அவனுக்குப் பூச்சாண்டி காட்டவும் சோறு ஊட்டவும் செய்வார்கள். வெள்ளை வாறான், வெள்ளேட்டைப்பிடிச்சு குடுத்துடுவன் என்பதாக பயமுறுத்துவார்கள். அவனும் வெள்ளைக்குப் பயப்பிடுவான். ஊரில் அத்தனை பேர் இருந்தும் ஏன் குழந்தையொன்றைப் பயமுறுத்த வெள்ளை என்ற கேள்வி எழுகிறது. அன்றைக்கு வெள்ளைக்கும் தான் பூச்சாண்டியாக இருப்பதில் ஒரு தயக்கமும் இருக்கவில்லை அல்லது வெள்ளையால் அதை மறுக்கவும் முடியவில்லை. இவ்வாறு ”பூச்சாண்டி” காட்டிப் பயப்படுத்த ஒடுக்கப்பட்ட சமூகமல்லாத…

July 25, 2023

எங்களுடைய பாடசாலைக்காலத்தில் ஒரு பகிடி இருந்தது. மிகச்சாதாரணமாக, பிள்ளைகள் அதையொரு நகைச்சுவையாக, துணுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள். பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பொது வாசகசாலையொன்றில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருக்கிறான். அப்போது முக்குவர் சாதியைச் சேர்ந்த ஒருநபர் அங்கே வருகிறார். அவர் பத்திரிக்கை படிக்க விரும்புகிறார் ஆனால் மற்றவர் இவரைக்கவனிக்காமல் தொடர்ந்தும் வாசித்துக் கொண்டிருக்கிறார் உடனே இவர் அவரை ‘பேப் – பறையா வாசிக்கிறாய்?’ என்கிறார், உடனே வாசித்துக் கொண்டிருப்பவர் சளைக்காமல் ‘முக்குவரறிவித்தல் வாசிக்கிறன்’ என்று சடைந்து சொல்கின்றார். அவர்…

July 25, 2023

   “When you cry and weep, when you are miserable, you are alone. When you celebrate, the whole existence participates with you. In celebration do we meet the ultimate, the eternal. Only in celebration do we go beyond the circle of birth and death. -OSHO விவரணை பருத்தித்துறை துறைமுகத்தில் தொடங்கியோடும்  கடற்கரை வீதியில்  சித்திரைப்பறுவ நாளில் (பிரதேச வழக்கு)…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’