July 25, 2023

இலங்கை அரசாங்கத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பான அரச கொள்கையின் 2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி இலங்கை முழுவதும் 578,160 குழந்தைகளுக்கு முன் பிள்ளைப்பராயக் கல்வி மற்றும் பராமரிப்பினை (Early Childhood Education Development and Care) வழங்குவதற்காக 28,449 முன்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுவதாகத் தகவல் கிடைக்கின்றது. இவ் ஆசிரியர்களில் 99% வீதமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். இதுவரை கிடைக்கின்ற தகவலின் படி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் கல்முனையில் மட்டும் ஒரு ஆண் ஆசிரியர் இருக்கிறார். இங்கே…

July 25, 2023

’இது என்னுடைய குப்பை இல்லை ஆனால் இது என்னுடைய பூமி’ என்ற வாக்கியத்துடன் கீழே before, after என்று ஓர் நிலக்காட்சி அசுத்தமாக இருந்ததையும், அதைச் சுத்தப்படுத்திய பின்னர் நபரொருவரோ பலரோ போட்டோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறோம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவ்விடத்திற்கு நான்கைந்து நாட்கள் கழித்துச் சென்று ‘NOW’ என்றொரு படத்தைப் பதிவிட வேண்டும் என்றார். எல்லாத்துறைகளிலும் ‘சமூக சேவை’ என்பது தனிநபர்களையும் சரி, அமைப்புக்களையும் சரி ஒரு வட்டத்திற்கு வெளியே…

July 25, 2023

ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொண்நூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி நடுவில் என்று அழைக்கப்படும்  நடுவிலார் திருவடி கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்த்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ  கதை வடிவத்திலோ…

July 25, 2023

There is no blue without yellow and without orange.”  – Vincent Van Gogh குளித்துவிட்டு வந்து  மின் விசிறியை நிறுத்தி, துவட்டாமல் நெடுநெரம் குறுக்குக் கட்டுடன் கட்டிலில் உட்கார்ந்திருப்பேன்.  நீரினது குளிர்ச்சியும் சோப்பினதும் வாசமும் கமழும் உடலில் நீர் மெல்ல உலர வியர்வை துளிர்க்கும். நீர்- சோப்புவாசம் – வியர்வை  மூன்றும் ஒரே நேரத்தில் சந்தித்திக்கும் நேரம் குறுகியது. நீர் உலர்ந்து, வியர்வை முழுவதுமாக உடலை மூடி சோப்பு வாசனை தீரும் முன்பாக…

July 25, 2023

மரபுரிமைகளை அறிதல், ஆவணப்படுத்தல், அவற்றைக்கொண்டாடுதல் என்ற அடிப்படைகளைக் கொண்ட ‘மரபுரிமை நடையான’ தொன்ம யாத்திரை ஐந்து நடைகளை நிறைவு செய்து ஆறாவது நடைக்குத் தயாராகியுள்ளது. இவ்விடத்தில் மரபுரிமைகளைத் தெரிவு செய்யும் போது அவற்றின் மீது செல்வாக்குடன் இருக்கக் கூடிய இனவாதம், சாதி, மதச்சார்பு, ஆணாதிக்கம் போன்ற பிற்போக்குதன்மைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்ற தெளிவு படுத்தல் அவசியமாகவிருக்கின்றது. ஏற்கனவே தேவாலயங்களின் நகரம் என்ற தொன்மயாத்திரை ஊர்காவற்றுறையின் காலனிய காலத்து தேவாலயங்களை நோக்கியதாயும், ஆறாவது தொன்ம யாத்திரை நாட்டுப்புறவியலுடன் இணைந்திருக்கும்…

July 25, 2023

சனநாயகம் புழக்கத்திற்குரிய வெளியாக திறந்து விடப்பட்ட பிறகு  மக்களின் பங்குபற்றுதலுக்கான வடிவங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் சமூகத்தின் கூட்டான மனநிலை, சனநாயக வடிவங்களை எதிர்ப்புணர்வுக்கும், போராடுதலுக்கும் தெரிவு செய்யும் காலத்தை தொடங்கியிருக்கிறது. அசலான சமூக வரலாறு என்பது பண்பாட்டு அடக்கு முறைகளையும் அதெற்கெதிரான போராட்டங்களையும் கொண்டிருக்கிறது. கடந்து சென்ற  நாட்களில் இலங்கையில் நடைபெற்ற சனநாயகப்போராட்டங்களில் நிலம் மற்றும் அதனுடைய மரபுரிமைகள் தொடர்ப்பான போராட்டங்கள் கவனிப்பைப் பெற்றிருக்கின்றன அரசியல் அதிகாரம், பண்பாட்டு அதிகாரம், பொருளாதார அதிகாரம் முதலானவற்றினால்…

July 25, 2023

– கேணிகள், சுமைதாங்கிகள், ஆவுரஞ்சிக்கற்கள் மரபுச்சின்னங்கள் – சமூக வரலாற்றை எழுதுதலும் அடையாளமும். ஒடுக்கப்படுகின்ற இனம் தன்னுடைய இனவரலாற்றை நிகழ்காலத்திலிருந்து ஒழுங்குபடுத்தி எழுத வேண்டியிருக்கிறது. அது இதுகாறும் சொல்லப்பட்ட கடவுள்களின், அரசர்களின், முதலாளிகளின், பணக்காரர்களின் வரலாறாக  எழுதப்படலாகாது. ஒரு இனம் தன்னுடைய இனவரைபின் வரலாற்றை சமூக வரலாறாக எழுதவேண்டும். அது விளிம்புநிலை சமூகங்களின், ஒடுக்கப்பட்டவர்களின், குரலற்றுப்போனவர்களின், குரலற்று இருப்பவர்களின் நிலைமைகளையும்  உள்வாங்கி பன்மைத்துவ நிலையில் எழுதுப்படுவதாக இருக்கவேண்டும்.   மன்னர்களின் வரலாற்றையே வரலாறாக எழுதும் ”மேலிருந்து கீழ்நோக்குதல்”…

July 25, 2023

திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்’ என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம்  அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும்  இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி  ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது.  தமிழர்களைப்  பொறுத்த வரையிலும் கூடப்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’