November 26, 2024

செங்களிக் குருதி |காளம் 15 செபக்கொட்டிலினுள்  இருந்து கொண்டு, வெளியே சீராக துமித்துக்கொண்டிருந்த  மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அமலா.  செபக்கொட்டிலின் மேல் தகரத்தில் செபக்கொட்டிலின் அருகில் அணைந்து நின்றிருந்த பாலை மரத்தின் இலைகளால் திரப்பட்ட  மழைத்தூறல்கள் பெருந்துளிகளாகி தகரத்தில் விழுந்து கொண்டிருந்ததால்  கொட்டிலினுள் மட்டும் பெருமழை பெய்யும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.  அதிகாலையிலேயே திரண்டு விட்ட மேகம், காலைவரை பெய்யவேயில்லை, இன்னும் கொஞ்சம் இறங்கினால்  எட்டி அளையலாம்போலிருந்தது. எல்லோரும் மழை மழை என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.  திரண்டவுடன் கொட்டிச்செல்லும் மேகத்தைப் பற்றி…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’