November 8, 2024

ரஜோ  |  காளம்  14 இரவு முழுவதும் மழை மிதமாகப் பெய்து கொண்டிருந்தது. இப்பொழுதான் கொஞ்சம் கடுமையாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. சொத சொத வென்ற உணர்வு எல்லோரிலும் தொற்றி, மழை அருவருப்பான சேறாக எல்லோரிலும் இறைந்து  கிடந்தது.  யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கூடாரங்களின் கீழே நீரோடிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பிருந்து பகுதியளவில்  அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தகரக் கொட்டகைகளைச் சிரமப்பட்டு   அடைந்து  கிடந்தனர். அங்கு இடம் கிடைக்காதவர்கள், தண்ணீர்கான்கள், மரக்குற்றிகள் ,  கற்களை தம் கூடாரங்களுக்குள் அடுக்கி…

November 4, 2024

கொன்றை மலர் | காளம் 13 வசந்தம் நிமிர்ந்து சுவர்களைப் பார்த்தாள்.  கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைத்திருந்த  ஏடுகளின் வாசனை சூழ்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு அலுமாரிக்கும்   உத்தூரணமாக  நீற்றினால் குறியிட்டு குங்குமமும் மஞ்சளும் வைத்திருந்தார்கள். முழுதாய் ஐய்யாயிரம் ரூபாய் செலவு செய்து தகப்பனும் தாயும் அவளை `காண்டம்` பார்க்கவென்று  கூட்டி வந்திருந்தனர்.  வசந்தம் முதல் தூமை கண்டபிறகுதான் எல்லாம் தொடங்கிற்று. கெட்ட கனவுகள், திடுகிட்டு திடுக்கிட்டு எழுந்து கொண்டாள் பிள்ளை. அவை கனவுகளைப் போல இல்லை….

October 21, 2024

போர்த் தெய்வம் | காளம் 12 ஆழமா வானமா என்று அறியாத இடம். எங்கே கிடக்கிறோம் என்ற உணர்வற்று  கண்களைக் கசக்கிய போது ஒவ்வொரு இழையாக அவிழ்ந்து புலர்ந்து கொண்டிருந்தது காலை.  மழை பெய்து நான்கு நாட்கள் கூட ஆகியிருக்காது  நிலம் சூழையில் வைத்து எடுத்தது போல் காய்ந்து கிடந்தது. கூடாரங்களுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த சற்று தடித்த தறப்பாளின் கீழே நீரோடியதில் உண்டான நில வடுக்கள் அப்படியே இறுகியிருந்தன. அதில் சில குறு மேடுகள்  முதுகை அண்டிக்…

October 18, 2024

கோடையின் முடிவு  | காளம் 11 ஐப்பசிக்கு இன்னும் சில நாட்களே இருந்தது, அந்தி இளவெய்யில் சரிந்து செம்மஞ்சள் ஒளி, புழுதிப் புகாரின் மீது விழுந்து நுண்தூசிகள் மிதந்தலைவதைக் காட்டியது,  குளிர் காற்று அருவியாற்றின் பக்கமாக காட்டுக்குள் இருந்து  தாழ்ந்து இறங்கிக் கூதலிட்டுச் சென்றது. அக்காற்றசைவு வெய்யிலைத் தொட்டது போன்ற எந்தக் காட்சியும் தோன்றவில்லை.  தூரத்தில் எங்கோ மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். காட்டுப்பக்கம் உச்சி வானில் மெல்லிருள் திரண்டிருந்தது. முகாம் வாசிகள் எல்லோரும் அதைக் கண்டனர். குழந்தைகள்…

October 13, 2024

பெரும்பாடு / காளம் 10 உக்காராவும் சின்னத்தையும் வவுனியா வைத்தியசாலையின்  நோயாளர் விடுதியின் வாசலில் இருந்த தொடர் நாற்காலிகளில் அருகருகே அமர்ந்திருந்தனர்.  சின்னத்தையின் மடியில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தாள். மதியத்திற்கு முதல் அம்புலன்ஸ் வண்டிகள் வந்து விடும் என்று நுள்ளான் கைபேசியில் சொல்லியிருந்தான்.  சனங்கள் கைபேசிகளை இரகசியமாக முகாம்களில் பாவிக்கிறார்கள் என்பது இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் தெரிந்திருந்தது. இரண்டு முறை சுற்றி வளைத்துச் சோதனை போட்டிருக்கிறார்கள். நுள்ளான் எப்படியோ அதை மறைத்து விட்டான்.  அடிக்கடி கதைப்பதைத் தவிர்க்க வேண்டும்…

October 7, 2024

பேற்றுக் குணுங்கு | காளம் 09 குழந்தை இல்லாத இரண்டாவது நாள்.   கடந்து சென்ற கூவும் காற்று, இவர்களின் கூடாரத்தின் மூடு துணியைச் சடசடத்துக் கொண்டிருந்தது. அத்தைக்காரியும் தாலிக்கொடியும் வெளியே தறப்பாளில்  படுத்திருந்தனர்.  வானம் ஒளிகொண்டு விரிந்து கிடந்தது. கச இருட்டிற்கு மேலே   தாரகை வீதியின் ஒளியில் முட்டிய தன் கண்கள் பளபளத்ததை தானே கண்டாள். சின்னத்தை பிள்ளையை பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்த்ததை கைபேசியில் அறிந்த பிறகும் மனதின் அலைவு  அடங்காமலிருந்தது….

October 4, 2024

இருட்சொல் | காளம் 08 சின்னத்தை பார்க்க வருகிறாள் என்றதும் அமலாவிற்குள் இருந்த இறுக்கங்களின் வடங்கள் தளர்ந்து அரவுகளென்றாகி இருள் ஆழங்களுக்குள் இறங்கிச்சென்று மறைந்தன. உக்காரா என்ற முகம் தெரியாத அந்த இளைஞன் நுள்ளானிடம் இரகசியமாக கைத்தொலைபேசி ஒன்றைக் கொடுத்திருந்தான். அதன் மூலம் தன்னுடன் பேசி, ஆகவேண்டியதை முடிக்கச் சொல்லியிருந்தான். சின்னத்தைதான் வெளியே இருந்து அவன் கேட்கும்  எல்லா அலுவல்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றாடம் தீயில் நிற்கும் உணர்விலிருந்து இவள் மீண்டு விட்டாலும், அவளுக்குள் பதட்டம் ஒன்று…

September 30, 2024

ஒலிச்சி | காளம் 07 மாசிப்பனி,  கட்டை விரல் நுணியை மரக்கச்செய்து நுண்மையான ஊசி முனைகளால் நெருடியது. சகட்டுப் பனிக்குள்ளும் தன் நாளாந்த சடங்குகளை ஆரம்பிப்பதற்கு ஒலும்பி  பெருங்கிராய் வயல் பரப்பின் கிழக்காக நீளும் வரம்பை நெருங்கினார்.  ஒவ்வொரு நாளும் அவருக்கு வயற்கிணற்றடியில்தான் விடிய வேண்டும். கடைவாய்க்குள் வேப்பங்குச்சியை அதக்கிக்கொண்டே வரம்புகளில் நடந்து வந்தார். மென்பனியின் கசட்டு மைமலில் துலாவின் அந்தம் கரைந்து வானத்தில் சொருகியிருப்பது போன்ற பிரமையைத் தந்தது. கிணற்றை நெருங்கி  துலாவைச்சாய்த்து  பட்டை வாளியில்…

Featured Book

நாவல்

யதார்த்தன்

’மனிதர்களின் துயரம் அவர்களின் கடந்த காலத்தில் வேர் விட்டுள்ளது.’