Category Archives: கட்டுரை

ஹர்த்தால் – விடுமுறையைக் களித்த படி போராடுதல்

yathaadmin/ October 27, 2016/ கட்டுரை/ 0 comments

ஒரு தேசம் உற்பத்தி செய்த போராட்ட வடிவங்கள் , அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் அந்ததந்த தேசங்களின் அரசியல் , புவியியல் மற்றும் சமூகபொருளாதார நிலைமைகளுக்காக உருவானவையாகவே இருக்கும். குறிப்பாக உள்நாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நாட்டின் குழுக்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ காலத்தின் தளத்தில் நின்று உதவுகின்றன. இந்திய பெருந்தேசத்தில் காலனித்துவத்தின் போதுகடைப்பிடிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் காலனித்துவத்தின் அரசியல் பூர்வமான அகற்றலில் பெரும் பங்காற்றின. எனினும் காலனித்துவத்தின் சமூக ,பொருளாதார , பண்பாட்டு தாக்கங்களையும் தொடர்ச்சியையும் இந்திய எதிர்ப்புக்கள் அகற்றுவதில் தோல்வி கண்டன அல்லது குறித்த

Read More

நாவல் பழக்கதை (version 2.0)

yathaadmin/ September 11, 2016/ கட்டுரை/ 0 comments

நான் ஒரு நாவல் பழ பிரியன். சிறுவயது முதல் நாவல் பழத்தின்ர சுவை நாக்கில ஒட்டிக்கொண்டு இண்டைக்குவரைக்கும் குறையாமல் இருக்கு. இது நேசறியில் ஆரம்பித்தது , சிறுவயதில் கரு கருவென நாவல் பழம் மாதிரி இருப்பன் எண்டு அம்மா சொல்லுவா , நேசறிக்கு போகேக்க தெருவில இருக்கிற  எல்லா பிள்ளையளோடவும் நேசறிக்கு நடந்து போவன். நாங்கள் போறவழியெல்லாம் அதிகம் நாவல் மரங்கள் இருக்கும், நாவல் பழ சீசன் தொடங்கீட்டு எண்டா போகும் போதும் வரும் போதும் பழம் பொறுக்கியே நேரம் போய்விடும். பள்ளிக்கூடம் போனால்

Read More

நல்லூர் – யாழ்நிலத்தின் அடையாளமாக உருவாதல்

yathaadmin/ August 25, 2016/ கட்டுரை/ 0 comments

(ஒரு நிலத்தின் அடையாள உருவாக்கம் என்பது மக்களின் வாழ்வியலை அசைக்கின்ற  முக்கிய பங்கைனை ஆற்றுகின்றது. நம்பிக்கை , பண்பாடு , அரசியல் ,சமயம் , பொருளாதாரம் , கலை  என்று பல உட் கூறுகள்  புரையோடி உருவாக்கும் ஒவ்வொரு அடையாளமும் மக்களின் பெயரால் சமூக அசைவுக்கு துணைநிற்கின்றன. அவ்வகையில் குறுங்காலத்தில்  ஓர் தன்னை அடையாளமாக மாற்றிய  அல்லது மாற்றப்பட்ட நல்லூர் பற்றிய அடையாள உருவாக்க  வாசிப்பை இக்கட்டுரை செய்ய முற்படுகின்றது.) ஆவணிமாதத்தின் முதற்பகுதியில் வீடுகளில் மச்சத்தையும் புலாலையும் நிறுத்த தொடங்குவர். நல்லூர்க் கோயிலைச் சுற்றி

Read More

பிரபாகரனின் மீசை

yathaadmin/ August 15, 2016/ கட்டுரை/ 2 comments

காலையில் அம்மா தாடி மீசையை எடு என்று நச்சரிக்கா விட்டால் இதை எழுததொடங்கியிருக்கவே மாட்டேன். அத்துடன் மேற்படி தலைப்பு நீங்கள் இந்த பத்தியைப் படிக்கத்தொடங்குவதற்காகவும் எனக்கு பிடித்த  ஒரு முக்கிய மீசைக்காரனின் மீசையின் பெயரில்  பத்தியைத் தொடங்கும் சுய ஆசையினாலும் இடப்பட்டிருக்கிறது. . YES…… மீசை , தாடியைப்பற்றிதான் நானும் நீங்களும் இங்கே உரையாடப்போகிறோம். பிரபாகரன் மீசையைப்பற்றி பத்தியின் இறுதியில்தான் உரையாடப்போகின்றோம் என்பதால்  கடைசிவரை படிப்பீர்கள் என்பது என் நப்பாசை. மீசையையும் தாடியையும்  ஒரு கலாசாரமாகவோ , கலைவடிவமாகவோ அழகுணர்வோடு  பார்த்த  ,பார்க்கின்ற உலகச்சமூகத்திலிருந்தும் 

Read More

பசியோடு அலைபவர்களும் நீர்நிலைக்கதைகளும்.

yathaadmin/ July 29, 2016/ கட்டுரை/ 0 comments

நேற்று காலையில் வீட்டிற்கு வந்து தனுஷ் என்னை ஏற்றும் போதே கைதடிக்கு போய்விட்டு போகவேண்டும் என்றான். சரியென்று தலையாட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். காலையில் அலுவலகம் போக எடுக்கும் அந்த 45 நிமிடங்களில் ஓயாமல் ஏதாவது  அலட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவோம் , வரும் போதும் அப்படித்தான்.  தனுசுடனான பெரும்பாலான அரட்டைகளில்  இலக்கியம் , சினிமா , அரசியல் என்று ஓடிக்கொண்டே இருக்கும்.  தனுஸ் ஒரு தீவிர வாசகன் , சினிமா இரசிகன்  அதுவும் அவன்  பேச்சில் எப்போதும் மலையாள வாசம் அடிக்கும் .  என்னுடைய நண்பர்களில் மலையாளம்

Read More

களனிப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம்

yathaadmin/ July 20, 2016/ கட்டுரை/ 0 comments

Dear Brother, I am an undergraduate from the University of Kelaniya, haling from Colombo. I am deeply disturbed by what I saw and heard regarding the situation in the University of Jaffna. It is one of the most prestigious universities in Sri Lanka which underwent difficulties at the time of the war. However, it is high time to restructure and

Read More

அன்புள்ள பல்கலைக் கழக தோழர்களுக்கு என்ற கட்டுரையின் சிங்கள ஆக்கம்

yathaadmin/ July 19, 2016/ கட்டுரை/ 0 comments

‘‘එකම පන්තියේ අපි ගල් ගැසිය යුත්තේ කාටද?‘‘ – යාපනය සරසවියෙන් ලියුමක්   ආදරණීය විශ්ව විද්‍යාල සහෝදරවරුනි, පසුගියදා  යාපනය විශ්වවිද්‍යාලයයේ සිදු වූ සිද්ධිය සහ ඊට අදාළ පුවත් සම්බන්ධව ද කිසිදු කතාබහකට මා අකැමතිය . පොලු ගත්තෝය, ගල් ගැසුවෝය, තුවාල සිදුවිය ,පොලීසිය පැමිණියේය , සිංහලය දමිළය කියා ජනතාව කුපිත කර වර්ණනා කරන සියලු මාධ්‍යවලට පිටතින් සිටීමට මම කැමැත්තෙමි. මේ අවස්ථාව අප සාකච්ඡා කළ යුතු මොහතකි

Read More

அனைவரும் இரண்டு மொழியையும் கற்க வேண்டும்!- அப்பொழுது தான் ஒரே குரலில் பேச முடியும்

yathaadmin/ July 18, 2016/ கட்டுரை/ 0 comments

கருத்தியல் ரீதியில் பல்கலைக்கழக முரண்பாட்டை புரிந்து கொள்ளுதல் • இனத்துவ அடையாளமும் தேசியவாதமும் 1891 இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 79 இனங்கள் இருப்பதாக கணக்கு உண்டு. அவற்றின் மூலம் “கலப்பு” இனம் சார்ந்த எண்ணிக்கை தான் மொத்தமும். “தூய” என்று எதுவும் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆகவே தேசியவாதமும் இனத்துவ அடையாளமும் இங்கே மறைந்து விட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த இனத்துவ ஒழுங்குருவாக்கம். அதன் வெளிப்பாடுகளை சமூக வலைத் தளங்களில் நிகழும் வேறுபட்ட கதையாடல்கள் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்

Read More

பல்கலைக்கழக முரண்பாடு – பொதுமக்கள் ஏன் நிலைப்பாடு எடுக்க வேண்டும் ?

yathaadmin/ July 18, 2016/ கட்டுரை/ 0 comments

  இந்தக் கட்டுரைக்கு முன் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும். நான் பல்கலைக் கழக மாணவனல்ல, இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பொதுவாகவே பல்கலைக் கழகத்தில் படிக்காதவர்கள், வெளியாட்கள் பல்கலைக் கழகம் தொடர்பில் கருத்தையோ அல்லது அபிப்பிராயத்தையோ எந்த ஒரு விடயத்தில் சொல்லும் போதும், முன்னாள் மற்றும் இந்நாள் பல்கலைக் கழக மாணவர்கள் எதிராகவே பார்ப்பார்கள். தங்கள் வீட்டிற்குள் நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லுவார்கள். படித்தால் தான் உங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆகவே அதன் நடைமுறைகள் தொடர்பில் பிறர் (தமது மொழிபேசுபவர்கள் கூட)

Read More

அன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

yathaadmin/ July 17, 2016/ கட்டுரை/ 0 comments

  அன்புள்ள  பல்கலைக்கழக தோழர்களுக்கு , நேற்று யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை.  கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள் காயம் வந்தது, பொலீஸ் வந்தது,சிங்களவன் என்றோம் ,தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி  வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது  நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம். நேற்று இரவு பல்கலைகழகத்தை கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலீஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள்

Read More

மிதிவெடியை கட்டவிழ்த்தல்

yathaadmin/ June 3, 2016/ கட்டுரை/ 0 comments

  சமூக அசைவியக்கத்தில் உணவுப்பண்பாட்டை வாசித்தல் என்பது குறித்த சமூகத்தின் …. நிறுத்து , சும்மா எப்பபாத்தாலும்  யுனிவர்சிட்டிக்கு திசிஸ் பேபர் சமிட் பண்ணுறபோல  ஆரம்பிக்கிறது இதே வேலையாப்போச்சு எனக்கு . ஒண்டுமில்ல மக்காள்   அன்றாடம் சாப்பிடுற சாப்பாடுகளில என்ன சுவையிருக்கு , சத்திருக்கு , எது விலை குறைவா இருக்கு , என்று பார்க்கிறனாங்கள் . அதுக்கு பின்னால என்ன கதையிருக்கெண்டு எப்பபாத்திருக்கிறம் ?  உதாரணத்துக்கு மிதிவெடிய எடுத்துக்கொள்வோம் . எனக்குத்தெரிஞ்சு 1990 களின் பிறகு ஈழத்தில குறிப்பா யாழ்ப்பாணப்பக்கம் கண்டறிப்பட்ட ஒரு

Read More

ஆண்டிகனி  ; அபத்தத்தின் மேடைவெளி   

yathaadmin/ May 13, 2016/ கட்டுரை/ 0 comments

  சிறுவயதுமுதல் கிரேக்க தொன்மங்களில் இருந்து பிறந்துவந்த வீரசாகச கதைகளை ஆர்வத்துடன் வாசித்துவந்தவன் . அந்த பழக்கம், இப்போதுவரை கிரேக்க தொன்மங்கள் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கின்றது. அக்கிலீசிலிருந்து ஹர்குலிஸ்வரை யான வீரர்களின் கதைகளும் , சீயூஸ் தொடக்கம் அதீனா வரையுள்ள கடவுளர்கள் பற்றிய கதைகள் , வெட்ட வெட்ட தலைமுளைக்கும் நாகங்களும்  ஜேசனின் தங்க கம்பளமும் , தீசியசின் எருமையரக்கன் என்று என்னுடைய சிறுபிராயம் முழுவது கிரேக்க தொன்மக்கதைகளால் நிரம்பியது.பின்னர் கொஞ்சம் வாசிப்புவிரிய கிரேக்கத்தின் துன்பியல் முதலான பிரதிகள் என்னை வந்தடைந்தன. கீழைத்தேசத்தின்

Read More

மொழியின் அபாயம் -கிரிஷாந்தை தொடர்ந்து .

yathaadmin/ April 29, 2016/ கட்டுரை/ 0 comments

அன்புள்ள கிரிஷாந், //குறித்த சொல்லாடல்களான ” தாழ்த்தப்பட்ட”, “ஒடுக்கப்பட்ட”,”தலித்” போன்றவற்றின் மூலம் தாம் அழைக்கப்படுவதை மக்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியைக் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறித்த சொல்லாடல்களை தமிழகம் ஓர் “அரசியல் சொல்லாக” கையாள்கிறது ஆகவே அதனை உச்சரிக்கும் தேவை அதிகமாக உள்ளது.// -கிரிஷாந் -(Kiri Shanth) தர்முபிரசாத்தின் சாதியம் பற்றிய உரையாடலின் தொடக்கம் , அதன்பின்னரான நண்பர்களின் கருத்தாடல்கள் ஏற்படுத்திய புதிய உரையாடல் வெளியில் மேலே மேற்கோள் காட்டபட்டிருக்கும் நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு சாரார் மீது கையாளப்படும்

Read More