November 8, 2024
ரஜோ | காளம் 14 இரவு முழுவதும் மழை மிதமாகப் பெய்து கொண்டிருந்தது. இப்பொழுதான் கொஞ்சம் கடுமையாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. சொத சொத வென்ற உணர்வு எல்லோரிலும் தொற்றி, மழை அருவருப்பான சேறாக எல்லோரிலும் இறைந்து கிடந்தது. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. கூடாரங்களின் கீழே நீரோடிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பிருந்து பகுதியளவில் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தகரக் கொட்டகைகளைச் சிரமப்பட்டு அடைந்து கிடந்தனர். அங்கு இடம் கிடைக்காதவர்கள், தண்ணீர்கான்கள், மரக்குற்றிகள் , கற்களை தம் கூடாரங்களுக்குள் அடுக்கி…