நம்முடைய பொதுச்சமூகம் அல்லது பெரும்பான்மை சமூகம் அறியும், நம்பும் வரலாறு பழைய வரலாற்று எழுத்துமுறை சார்ந்தது. பழைய வரலாற்று எழுத்துமுறை என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால் ஏதோவொரு அதிகார நலனுக்காக எழுதப்பட்ட வரலாறு. அது பன்மைத்துவத்தையும் நெகிழ்வையும் மாற்றம்மிக்க விசைகளையும் மறுப்பதுடன் வன்முறைகளுக்கான விதைகளைக் கொண்டதுமாகும். அவற்றின் மையப்பகுதிகளில் அதிகாரமற்ற யாரின் குரலும் கிடையாது. பழைய வரலாற்று எழுத்துமுறை அரசர்கள், ஆதிக்கக் குலக்குழுக்கள், ஆதிக்க சாதிகள், ஆண்கள், எசமான்கள், பிரபுக்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் போன்றோரால் அவர்களைப்பற்றி அவர்களும்…