October 21, 2024
போர்த் தெய்வம் | காளம் 12 ஆழமா வானமா என்று அறியாத இடம். எங்கே கிடக்கிறோம் என்ற உணர்வற்று கண்களைக் கசக்கிய போது ஒவ்வொரு இழையாக அவிழ்ந்து புலர்ந்து கொண்டிருந்தது காலை. மழை பெய்து நான்கு நாட்கள் கூட ஆகியிருக்காது நிலம் சூழையில் வைத்து எடுத்தது போல் காய்ந்து கிடந்தது. கூடாரங்களுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்த சற்று தடித்த தறப்பாளின் கீழே நீரோடியதில் உண்டான நில வடுக்கள் அப்படியே இறுகியிருந்தன. அதில் சில குறு மேடுகள் முதுகை அண்டிக்…