
August 26, 2023
நண்பர்களுடன் யூலை முடிவில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு கண்டியில் சென்று இறங்கினோம். நீளமாக திட்டமிடப்படாத அதிகம் பணச்செலவற்ற எக்களுடைய வட்சப் குறூப்பின் பெயரைப்போல அதுவொரு ‘கல்விச்சுற்றுலா’ அவ்வளவுதான். முதலில் கண்டி பிறகு ஹட்டன் மிகுதி எல்லாம் அந்தந்த நேரத்து நியாயம் என்று விட்டு விட்டு புறப்பட்டிருந்தோம். பொதுப்போக்குவரத்தின் மூலம் பிரயாணப்படுவது என்று திட்டமிட்டிருந்தோம். இம்முறை மலையகத்திற்கு செல்வதில் தனிப்பட்டு என்னை ஆர்வப்படுத்தியது மலையக மக்கள் இந்த நாட்டிற்கு தோட்டத்தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டு இருநூறு வருடங்கள் கடந்திருந்த நிகழ்வுகளும் சமநேரத்தில்…